உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




360

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

பொதுமது செல்வராசன் போற்றும்பா வாணர் புதுமுது நூல்வெளியீட் டார்.

96. செங்காட்டுப் பட்டிச் செழுமுத் தமிழ்க்கழகன் தென்காட்டுஞ் செந்தமிழ்ச் செல்வராசன் - நன்கீட்டி நாலா யிரம்வெண்பொன் நற்றமிழ்த் தாய்க்களித்தான் நூலாய் வெளிவரல் நோக்கு.

97. முந்தியே ஆரியத்தால் மொய்ம்பழிந்த செந்தமிழ் பிந்திய இந்தியால் பேருமற - நைந்தழியும் எல்லைவரு முன்னே இடுக்கண் களைந்தமகன் செல்வராசன் என்றுயர்த்திச் செப்பு.

98. ஆங்கிலத்தோ டாசிரியம் ஆன்ற கலையிளைஞன் ஓங்குமுளச் செல்வராசன் ஒண்டமிழைத் - தாங்கினான் தந்நலமே கொண்ட தனித்தமிழ்ப்பே ராசிரியர் வின்னமுறத் தம்மையும்தாம் விற்று.

99. கோடிக் கணக்கிற் குவித்துந் தமிழ்பேணாப் பேடிக் கயவர் பெயர்கருக்க - நாடித்

துளிகூடு வெள்ளம்போல் தொக்கதுசெங் கையில் கிளியீடு வாய்த்த கிழி.

100. இரப்ப திகழா தினிய தமிழ்த் தாயைப் புரக்கவெழுந் தான்செல்வ ராசன் - புரக்கும் தமிழும் எவற்கும் தனித்தமுறை யன்றித் தமிழர் அனைவருக்கும் தாய்.

101. குன்றக் குடியடிகள் குன்றா அருட்கையால் ஒன்றிக் கொடுத்தகிழி ஓங்கியதே - அன்று தருமிக்குத் தந்தது தாராத் தமிழின் பெருமை வரலாறு பெற்று.

102. பல்லா யிரம்வேலிப் பண்ணைப் பெருமடங்கள் எல்லாம் இருள எழுந்தமதி - நல்லொளிபோன்ம் கூர்த்தவரு ளாலெனக்குக் குன்றக் குடியடிகள் போர்த்திய பொற்கரைவெண் பட்டு.

103. தீவம் பலசென்று தேடிய பஃறாரம்

நாவாய் ஒருதுறையில் நல்கியதே - மேவர்