உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

உறையூர் பலதந்த ஒண்பொருள் எற்குத் துறையூரில் தந்த தொடர்பு.

பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு -

செட்டிகுளம்

104. மறைமலை மாணடிகள் மாசில் தமிழன் நிறையொளித் தீவம் நிறுவும் - பொறையன்றோ சேல்விழி போற்பிறழும் செட்டிகுளப் பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு.

105. செந்தமிழ் அன்னை செழியன் தமிழ்நாடும் வெந்தழல் ஆரிய வெம்மையால் - வந்தே குளிர்ச்சிபெறத் தோழியொடு கூடி மகிழ்ந்து குளிப்பது செட்டி குளம்.

106. ஓவிய நல்லாடை ஒண்மானங் காத்தல்போல் மேவிய செட்டிகுள மேற்பள்ளி - ஓவ

நறாஅவனும் நெய்வாசான் நாகமுத்தும் காத்தார் குறாவுதமிழ் மானங் குறித்து.

பாவாணர் மணிவிழாக்குழு – மதுரை

107. கருமுத்து சுந்தரம் செட்டியார் கூடல்

திருவொத்த தந்தை திறத்தில் - மருவுற்றென்

மன்னும் மணிவிழாக்கோள் மன்னா யளித்தார்வெண் பொன்னு மரையா யிரம்.

108. மாநிலக் கல்லுரி மன்னுந் தமிழ்த்தலைவர் நாநலச் சுந்தரம் நற்கருணை - வானிரும்பொன் வாணிகம னோகரனார் வாய்ந்துறுப்பாய் வந்தவிழா ஏணுருபா ஏழா யிரம்.

109. அத்தொகையி லீரா யிரத்தைந்நூ றாங்கிலத்தில் உற்ற உலகமுதற் செம்மொழிக் - கற்றதே எச்சமிந் நூலிற் கிசைந்ததிந் நற்றொண்டை மெச்சுந் தமிழுலகம் மேல்.

110. பண்டா ரகர்ப்பட்டப் பல்லோருட் சுந்தரமே கண்டார் தமிழகக் கண்ணாகக் -கொண்ட

361