உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




362

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

பிறவித் தமிழ்ப்பற்றாற் பேணினார் என்னை யுறவிற் பிசிராந்தை யொத்து.

111. தன்கரும மென்றுபெருந் தாளாண்மை யோடுதமிழ் அன்பரிட மெல்லாம் அலைந்தோடி - நன்பொருளை ஈட்டினார் தம்மை இணைச்செயல ரென்றுசெயல் காட்டினார் நங்கருணை காண்.

112. தொங்கல் விழுங்காற் றொகையெது வானாலும் தன்கைப் பொருள்கொடுக்குந் தாராளச் - செங்கை இரும்பு வணிகரென ஏந்துபொரு ளாளர் விரும்பும் மனோகரனார் வீறு

113. பாவாணன் பேரிற் பணைத்த மணிவிழாப்பொன் மூவோர் தொகுப்பு மொழியனைக்கும் - மேவினுமே நாவார வாழ்த்தி நவையின் றவர்ப்புகழ்தல் காவாவே னோர்க்குக் கடன்.

திருக்குறள் மரபுரை

தமிழர்வ.5

114. ஆரா யணியன்னத் தாளக ஆசிரி யன்முருகன் நேரா யுரைவள் ளுவன்குற ளுற்றிட நீணிலத்தில் சீரார் தமிழ்ப்புல வன்கந்த சாமியும் சேர்துணையால் ஈரா யிரத்தின் மிகவெண்பொன் தான்தொகுத் தீந்தனனே. 115. தொடைகெழு பாபுனை காவிரி துள்ளுந் திருச்சிநகர் இடையொரு சாலைகல் லூரிமெய் யன்பர் விடுத்தபண விடைவழு வாது மதிதொறும் வந்து விழுக்குறள்தென் நடைகொழு மிவ்வுரை யச்சீடு நன்றாய் நடந்ததுவே. 116. பத்திற் குறையா மதிபல் லகஞ்சென்றும் பாகமன்றி மெத்தக் கவன்றும் முடியாவிம் மெய்ந்நூல் மரபுரைதான் தித்தித் தொழுகிந் தியநாட்டு வைப்பகத் தின்கணக்கன் முத்துக் கிருட்டிணன் இல்லம் புகுந்ததும் முற்றியதே. 117. பணத்திற்கு மூன்று படிவிற்ற காலை பரிந்துகம்பன் உணத்தந்த வள்ளல் சடையன் உதவிய தோர்வியப்போ கிணற்றிற்குட் கேணியும் ஊறாநாள் முத்துக் கிருட்டிணன்தான் குணத்திற்கீ டின்றிக் கொடுத்தனன் யாவும் குறிப்பறவே