உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

118. நாவிரும் பின்சுவை யோமண நல்லுணா நாளுமுண்ணத் தேவனின் தேவ வெனவென்னைத் தீதற வைகுவித்தே ஆவியன் முத்துக் கிருட்டிணன் என்னுரை அச்சகத்தை மேவுவித் தேயதன் மெய்ப்புத் திருத்தினன் மேதகவே.

மண்ணில்விண்

119. நெய்வேலி உ.த.க. நேயர் தமிழ்காக்கும்

மெய்வேலி யாகி மிளிர்ந்தனர்காண் - மொய்வேலின் மண்ணில்விண் ணிற்கு மகிழ்ந்தளித்த வெண்பொற்கா செண்ணின்முன் மூவா யிரம்.

பு. மனோகரனார் கொடை

120. திருமணம் என்மகட்குத் தென்பாய் நிகழ ஒருநூ றுரூபா வுகுத்த - பெருமான் மனங்கவர்ந்தார் தண்டமிழ் மாண்புற வாழ்க இனங்கவர்ந்து நீடி யினிது.

தமிழ் வரலாறு அச்சீடு

121. சீராய்ப் பிழையின்றிச் செந்தமிழ்நூ லச்சிட்டு நேராய்த் தருபவர் நீணிலத்தில் - ஆராய்ந்து பாராய் பெருவழிப் பாரிப்பேர் அச்சகத்தார் நாரா யணன்செட்டி யார்.

122. எத்தனை மெய்ப்பேனும் இந்நூற் கிடரின்றி உய்த்தவை தாமும் உடன்திருத்தி - அச்சும் அகனமர்ந் திட்டார் அவருக்குக் கைம்மா றெவன்புரி கிற்பார் எமர்.

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் -

அச்சீடு

123. ஒருமுறையே நான்திருத்தி யுய்த்தவஞ்சல் முன்னே இருமுறையும் பின்னே இறுதி - ஒருமுறையும்

363

-

- 24.4.65

24.2.1967