உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




364

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஆராய்ந்து பார்த்ததை அச்சிட்ட செந்தமிழன்

நாரா யணன்செட்டி நம்பு.

வண்ணனை மொழிநூலின்

வழுவியல் - அச்சீடு

124. முன்னூல்போல் இந்நூலும் முத்தாம் எழுத்தடுக்கி நன்னூலாய் அச்சிட்டு நல்கினன்காண் - இந்நாளும் பேரான பாரி பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்செட்டி நன்கு.

நாராயணன் வாழி நன்கு

125. முப்பால் தமிழ்மரபு முன்னிய விவ்வுரையை எப்போதும் போல இனிதாகத் - தப்பாமல் அச்சிட்டுத் தந்தான் அழகிய பாரிப்பேர் அச்சகத்தான் நாரா யணன்.

126. கார்வாழி ஏர்வாழி கன்னித் தமிழ்வாழி சீரார்பல் செல்வர் சிறந்துதவப் - பார்நீடு பேரோங்கப் பாரிப் பெயர்தாங்கும் அச்சகத்தான் நாரா யணன்வாழி நன்கு.

-

வடமொழி வரலாறு - அச்சீடு

127. தாய்மொழிப் பற்றினால் தானும் பிழைதிருத்தி வாய்மொழிக் கேற்ப வடித்தெழுத்தும் தேமொழிப்பேர் ஆரிய வாற்றையும் அச்சிட் டுதவினன்காண் நாரா யணஞ்செட்டி நன்கு.

அருணாசலர்க்கு

-

மெய்ப்பு நன்றி

128. அல்லும் பகலும் அருணா சலமென்னும் நல்லிறையன் மெய்ப்பு நவைநீங்க - ஒல்லும்

- 29.2.68

- 28.8.1968

- 4.10.69

-

6.12.67