உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




368

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

148. தொட்டனைத் தூறும் துரவுபோல் முப்பாலும் கற்றனைத் தூறும் கலையறிவுக் - கொட்டாரம் நூற்றுக் கணக்கில் நுவலுரை கண்டாலும் ஈற்றைக் கணித்தார் இலர்.

149. ஆரிய நஞ்சிற் கருமருந்தாய் வந்தகுறள் சீரிய மாமலைக்குச் செல்லாது -யாரகத்தும் அல்லும்பகலும் அமர்ந்துதவும் மூலிகையாம் ஒல்லும் இருமைநல் வாழ்வு.

150. ஆரியன் தேவென் றறிவிழந்து மூவேந்தும் பூரிய தாழ்விற் பொருந்தியகால் - சீரிய தெய்வப் புலவன் திருவள் ளுவன்தந்தான் உய்வைத் தமிழர்க் குவந்து.

-

கழக ஆட்சியர் வ.சு. பவளவிழா மலர் : 27. பெரியார் தன்மான இயக்கம்

151. தமிழன் விடுதலைத் தலைவர் மூவருள் அமரும் ஈகையர் அறநூல் வள்ளுவர் தமியின் மொழியினர் தவநன் மறைமலை இமிழ்தன் மானியர் இராம சாமியார்.

.

152. அரிய செயல்களை ஆற்று வார்தமைப் பெரியார் எனச்சொலும் பிறங்கு திருக்குறள் உரியர் இப்பெயர்க் கொருவர் நேரிலே இரியீ ரோடையர் இராம சாமியார்.

153. இல்லத் திருந்துநல் லின்ப வாழ்வுறும்

செல்வச் சிறப்பினிற் சிறிதும் வேட்டிலர்

வல்லைத் தமக்கென வாழ்வு நீக்கினார் ஒல்லும் வகையெலாம் உழைக்க இனவர்க்கே.

154. மல்லைப் பதவிகொள் மாட்சி யிருப்பினும் அல்லிற் பகலினில் அடுத்த வழியெலாம் கல்லிற் சாணியிற் கடுத்த வசவுறுஞ்

சொல்லிற் படும்பொறைச் சூர வாழ்க்கையர்.