உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

155. மலையெ னும்மறை மலையென் அடிகளும் தலையென் சோமசுந் தரபா ரதியும்பின்

தொலையும் இந்தியைத் தொடர்ந்தெ திர்க்கினும் நிலைசி றந்ததி ராம சாமியால்.

156. குடிசெய் வார்க்கிலை கூறும் பருவமே மடிசெய் தேயவர் மானங் கொளக்கெடும் இடிசெய் உடம்புபல் இடும்பைக் கலமெனத் துடிசெய் தேயவர் தொண்டு பூண்டுளார். 157. தான மிட்டதன் தலைவன் நிலைகெட ஈனச் சூத்திரன் என்னுந் தீயனை வானங் காட்டென வணங்குந் தமிழன்தன் மானங் கெட்டுவாழ் வழமை கடிந்துளார். 158. படிமை மேல்மிகு பாலை யூற்றலும் குடுமி மலையெரி கோநெய் கொட்டலும் கடவுள் தேரினைக் கடத்த லும்முனோர் கொடமை மடம்பகுத் தறிவில் கோளென்றார். 159. கட்டுக் கதைகளைக் கடவுள் தொன்மத்தைப் பிட்டுப் பிட்டவை பிதற்றல் புரட்டலை வெட்ட வெளிச்சமாய் விளக்கி னார்முனம் பட்டப் படிப்பெல்லாம் பயனில் குப்பையே. 160. அடருந் தமிழரோ டணையுந் திரவிடர் மடமை தவிர்ந்துதன் மான வாழ்வுற இடர்கொள் ஆர்வலர் இராம சாமியார் கடவுள் இலையெனக் கழறும் எல்லையே.

சீரிய கொள்கைச் சிதம்பரப் பதிகம்

161. நாட்டுப்பற் றால்முன்னே நாய்படாப் பாடுபட்ட ஒட்டப் பிடார ஒளிர்மறவன் - மாட்டன்று நன்றிபா ராட்டாத நாடொரு நூற்றாண்டு சென்றபின் செய்யும் சிறப்பு.

369

-த.இ.வ 257