உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

224. இந்தி யாவின் இரும ருங்கும் .இருபெ ரும்புண் போலவே அந்த நாளில் வெறிம தத்தால் ஆன பாக்கித் தானையே வந்து றாமல் தடுத்த லின்றி வாயி ழந்து விட்டனர் இந்த நாளில் கையைக் கொல்ல எழுந்த தேமுள் பெருமரம் 225. பூனை போற்சி றுத்த நாட்டுப் பொறியி லாத மூடர்தாம்

யானை போற்பெ ருத்த இந்தி யாவை யேயெ திர்க்கின்றார் தானை தாவு மக்கள் வலிமைத் தரத்தை எண்ணிப் பார்த்திலர் போன மூன்று போரில் தோற்றுப் போன தும்ம றந்தனர் 226. அமெரிக் கர்நம் மவருக் குதவி யளித்த லின்றி மழுப்பினும் அமெரிக் கையா யிராது பகைவர்க் கான வுதவி செய்கின்றார் தமருக் குந்தாய் நாட்டிற் கும்வரிதராது பொருது விலகினர் எமுனைக் குந்தொ டர்பி லாத ஈரினங்களை இணைக்கின்றார் 227. மறும னத்தில் இன்றி ஏழை மாந்தர்க் குற்ற துணைவராய்

உறும னத்த ராய்க்கி ளர்ந்தே உவமை இல்லான் துணைபெறின் செறும னத்தார் படைதி ரண்டு சீறி வஞ்சினங் கூறினும் அறுபு னத்திற் கதிர்கள் போல அறுத லைகள் ஆகுவர் 228. மானங்கெட்ட வாழ்வு யர்ந்த மக்கள் திணையில் இல்லையே சீன ருக்குஞ் சோன கர்க்குஞ் சிறிதும் அச்சம் இன்றியே ஊன ரத்தம் துளியு டம்பில் உள்ள வரையும் பொருமினே வான வர்பூச் சிந்திவாழ்த்த வாகை சூடி யாடுவீர்

229 வலியப் போர்க்குச் செல்வ தில்லை வந்த போரை விடுவதோ எலிகள் வெள்ள மேனும் நாகம் இரையின் மாய்ந்து சாய்ந்திடும் மெலியர் என்று நம்மைப் பகைவர் மெத்த அவமதித்தனர் புலிகள் போலப் பாய்ந்து பொருது புகழை உலகில் நாட்டுவீர் 230. கேட்டின் முன்னர்க் கூர்ந்த மதியும் கெட்டு மழுங்கிப் போகுமே நீட்ட மாகப் பிரிந்த நாடு நீணி லத்திற் புதுமையே

ஓட்டெ டுத்த பின்னும் இட்ட ஊளை என்ன பொருளதோ பூட்டோ திறப்ப தின்றி நாட்டைப் பூட்டி யெங்கும் போகுமோ 231. கோடிச் செல்வர் பணத்தை இன்று குன்று போற்கு வித்திடும் கூடிப் பற்பல வெள்ளமாகக் குமரர் போரிற் குதித்திடும் ஓடிச் செய்யும் ஆற்ற லில்லார் ஊன ரத்தம் உதவுவீர் பேடிக் கியாசு டின்கி ளைஞர் பேரை வேர றுத்திடும்

379