உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




378

பாவாணர் கடிதங்கள்

சீரிய அறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார் ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என்பார் 217. இரவிலே தந்தை தாயை இழந்தபிள் ளைகள் காலை அருவிபோல் கண்ணீர் சிந்தி அம்மையப் பனையே கூவி வெருவியே யழுது தேம்பி வெந்தழல் மெழுகுபோல

உருகியுள் வெந்த கோலம் உள்ளுவார் குலையும் வேகும் 218. அருந்தலாய் விற்ற காலை அரும்பெரும் பாடு பட்டு வருந்தியே தேடிப் பெற்ற வளப்படு பொருளும் வீடும் பருந்தடி குஞ்சு போலப் பசக்கென மறைந்து போக இருந்துபின் அழுது நைந்தார் எத்தனைபேர்கள் அம்மா! 219. அரசனே கொடுமை செய்யின் ஆரிடம் சொல்வ தென்பார் பரசுறு கடவுள் காப்பும் பறந்திடின் நாமென் செய்வாம் துருசினில் மாயும் மக்கள் தொல்லைகள் தீரும் வண்ணம் கரிசொடு செருக்கொழிந்து காவல்பூண் அமைச்சர் ஆள்க 220. நன்செயும் புன்செ யாகி நாற்புற வரம்ப ழிந்து

பாடல்கள்

முன்செயல் யாவும் கெட்டு முதிர்ந்தநெற் பயிரு மற்று வன்செயல் வெள்ளக் காலாய் வதிந்தது வடிந்த பின்னும் என்செய வுணவிற் கென்றே இரங்கினர் உழவ ரெல்லாம் 221. சடசட வென்று கொட்டிச் சாடும்வன் புயலாற் செத்த படபட வென்ற டித்துப் பண்ணை இற் கோழி யெல்லாம் கடகட வென்று மாய்ந்த கால்நடை கணக்கி லாத மடமட வென்று சாய்ந்த மரங்களே சாலை சோலை 222. நீர்மிகின் சிறையு மில்லை நீளியின் வலியு மில்லை கார்மிகின் உறையு ளில்லை கனல்மிகின் அணைப்பு மில்லை பார்மிகும் பரிசொன் றில்லை பரவெளி மனையெழுப்பிக் கூர்மதிக் குடும்பத் திட்டங் கொண்டினி தொழுகு வோமே

நீளி-காற்று செ.செ. 52:196:197 257;258

படைமறவாகை

223. என்ன இந்த நாட்டில் அமைதி இன்னும் நிலவ வில்லையே பென்னம் பெரிய பிரித்தா னீயப் பேர ரசையும் வென்றனம் பொன்ன கர்நல் வாழ்வு வந்து புகுந்த தென்றுமகிழ்ந்தனம் பின்னர் நம்மிற் பிரிந்த சின்னப் பித்தர்க் கஞ்சிப் பணிவதோ