உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

209. குப்பை யுயர்ந்தது கோபுரம் தாழ்ந்ததெனச் செப்பா வடமொழி சீர்த்ததெனும் - தப்பறவே இன்னே எழுந்தார் இணையில் கிருட்டிணனார் முன்னோர் மறமானம் மூண்டு

210. நாடுங் குலவினமும் நம்பும் மதவகைகோட் பாடுந் தொழிற்றுறையும் பாராது - நீடும் தமிழே கருதித் தகுந்தாரைத் தள்ளா நமரே கிருட்டிணனார்.

211. கோளாண்மை மிக்குக் குறித்த கலைதேர்ந்து தாளாண்மை யாற்சொம் தகவீட்டி - வேளாண்மை செய்யும் நிறைதமிழர் சிங்க புரிவாழும் செய்ய கிருட்டிணரே சீர்த்து

வெள்ளச்சேத விளரிப் பதிகம்

212. எத்தனை வெள்ள மோநாம் இதுவரை கதையிற்கேட்டோம் இத்தனை கொடுமையாக எவருமே கண்டதில்லை அத்தனார் கோயிலுள்ளும் அனைவரும் நசுங்கிச் சாகப் பித்தமா வெறியின் வேகம் பிடித்தது காற்றுப் பூதம் 213. வெள்ளமென் றறிவிப் பின்றி வீட்டினுள் உறங்கும் வேளை கொள்ளையர் வருதல் போலக் கூடிய இரண்டு பூதம் பொள்ளெனக் கேடு செய்யப் பொடித்தன பணிச்சா லைகள் நள்ளிர வன்றே நாகை நத்தப்பா ழாயிற் றந்தோ

214. கண்ணினுக் கெட்டு மட்டும் கண்டது வெள்ளக் காடு மண்ணியல் ஊர்தியொன்றும் மற்றவூர் சென்ற தில்லை உண்ணவோர் உணவு மில்லை உரைக்கவோர் வழியும் இல்லை விண்ணவர் உதவி போலூண் வீழ்ந்தது மூன்றாம் நாளே 215. தமிழ்நிலத் தலையாஞ் சென்னை தாவியே தெலுங்க நாட்டில் இமிழ்கடல் எரியுந் தோன்ற எழுமலை யலைக ளாலே அமிழ்கரை யூர்கள் மாய்ந்தார் ஆயிரம் பத்தோ டைந்தும் குமிழ்நுரை வெள்ளம் வந்து குடிகொண்ட தூர்கள் எல்லாம். 216. ஆருயிர் அனைய என்றன் அன்பனை இழந்தேன் என்பார் கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி இழந்தேன் என்பார்

377