உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




376

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

சிங்கபுரி வணிகக் கல்விச்சாலை

உரிமை முதல்வர்

உயர்திரு கோபால கிருட்டிணனார் மீது

நூலாசிரியன் ஞா. தேவநேயன் பாடிய பாடாண் பதிகம்.

202. அறிவொழுகு கண்ணும் அமர்தமிழின் நோக்கும் செறிவுடைய நாவும் செழிம்பும்- பொறிநிலவும்

கோவீறு நெஞ்சுபொற் கோல வளர்வுடம்பும் கோபால கிரு)ட்டிணர் கூறு.

203. வடமொழியை வாழ்த்தி வழங்குதமிழ் தாழ்த்தும் திடமுடையர் தென்னாட்டுச் செல்வர் - கடல்கடந்து சிங்க புரித்தீவிற் சேர்ந்த கிருட்டிணனார். தங்கு தமிழ்ப்பணி செய் தார்.

204. கடையெழு வள்ளலர்பின் கானக் குமணன் நடையுயர் நல்லியக் கோடன் - கொடைமிகு சீதக்கா திக்குப்பின் சேது ரகுநாதன்

ஈதற்கின் றோகிருட்டினர்.

205. கால்கடுத்துக் கொப்புளிக்கக் காதம் பலநடந்து நூல்வடித்துச் சொல்லினும் நொய்தரார் - பாலெடுத்து வேறொருவர் கூறினாலும் வெண்படத்தும் கண்டிரார்க்கு மாறிலாதீந் தார்கிருட்டிணர்.

206. முன்னாட் கொடையாளர் முந்திப் புகழ்பெற்றார் செந்நாப் புலவர் செயற்பாவால் - இந்நாளில் முந்திப் பொருளளித்த முன்பிற் கிருட்டிணர்க்குப் பிந்திப் புகழ்ந்துரைத்தேன் பேர்ந்து

207. கோடிக் கணக்கிற் குவித்திருந்தும் செந்தமிழை நாடித் தனியிதழ்க்கும் நல்காதார் - நாடிதிலே செந்தமிழ்ச் செல்விக்கும் தென்மொழிக்கும் வாழ்நாட்குத் தந்தவர் கிருட்டிணனார் தான்.

208. அன்னை யெனவே அறிவுடம்பை முன்வளர்த்துப்

பின்னும் பலவாய்ப் பெரிதுதவும் -முன்னை

முகனை மொழித்தாயின் முட்டறுத்த செல்வ மகனார் கிருட்டிணரே மற்று