உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

194. தொல்காப் பியமும் துணையாம் திருக்குறளும் பல்காற் பயின்று பயன்கண்ட - ஒல்காப்

பெருந்தமிழ வாழ்வு பெயர்பெற வாழ்ந்தான் விருந்திராம சாமி விழைந்து.

195. வீட்டிற்கும் தான்பிறந்த வெள்ளாண் குடியினுக்கும் நாட்டிற்கும் செந்தமிழ் நல்லறிஞர் - கூட்டிற்கும் சேலங்கல் லூரிக்கும் சீரார் இராமசாமி சாலுங் கவுண்டனெனச் சாற்று.

196. மூவுலகும் ஆளும் முதல்வனே வந்திடினும் பாவுலவும் பைந்தமிழ்ப் பண்டிதன் - மேவுவதை இம்மியதும் தள்ளா இராமசா மிக்கவுண்டன் செம்மனிகர் வேறியார் செப்பு.

197. இந்நூலும் ஏனை எழில்மொழி யாராய்ச்சி நன்னூலும் நன்கிருந்து நான்செய்தேன் - எந்நாளும் ஏராள ஓய்வும் இணங்கும் இராமசாமி தாராளம் தந்ததனால் தான்.

198. சேலங்கல் லூரி சிறந்திராம சாமியின்றேல் ஞாலம் பரவுதமிழ் ஆராய்ச்சி - நூலியற்றும் தேவநே யன்எங்கே தென்மொழித் தொண்டெங்கே பாவுதமிழ் மீட்பெங்கே பார்.

199. வள்ளுவர் மன்றமென்று வைத்தும் உரைநடைநூல் தெள்ளு தமிழ் வரைந்தும் சொற்பொழிந்தும் - ஒள்ளிய ஆங்கிலச் சொற்பெயர்த்தும் ஆராய்ந் திராமசாமி தாங்கினன் செந்தமிழைத் தான்.

200. வேலை யினிதியல வேண்டும் உதவிசெய்து மாலையுங் கூடிமகிழ்ந்துலவி - மேலுந்தான் இன்னுரை யாடியெனக் கின்ப வுணவளித்தான் மன்னே இராமசா மி.

201. இராமசா மிக்கவுண்டன் இன்புகழ் வாழி பராவு கனகம்மை வாழி - விராவி அவர்நன்னான் மக்களும் வாழி வழியும் இவரின்னார் என்ன இனிது.

375

-த.வ. 297.298.