உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




374

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

188. இம்மியே கூடிடினும் இன்றமிழை விற்றுவிடும் தெம்மானப் போலித் திரிதமிழர் - கும்மிடையே பாலை நிலத்திற் பழம்படு பன்மரப்பைஞ் சோலையே பாரதிதா சன்.

189. நண்பன் புறத்திருக்க நல்வான் அமுதெனினும் உண்ப திலையென் றுயர்தமிழப் - பண்பதனைத் தன்னகத்தும் வேற்றகத்துந் தப்பாது கைக்கொண்ட தென்னகத்தான் பாரதிதா சன்.

190. புரட்சிப்பா வேந்தனென்று போற்றும் புகழில் முரட்சிக் கிடமின்றி முற்றி - வறட்சியால் வாடி வருந்தினும் வண்டமிழைக் கைவிடான் வீடினான் பாரதிதா சன்.

191. ஆண்டாண்டு தோறும் அவனை நினைவுகூர்ந்

தாண்டாண்டு கொண்டாடும் ஆர்வவிழா - வேண்டா அவனுரையைக் கையாண் டடிமைத் தனத்தின் இவண்விலகக் கண்ணா விடத்து.

சேக்கை - சிவப்பு. தெவ்+மானம் - தெம்மானம்

-

தெவ் - பகை. கும் கூட்டம். கும்முதல் - கூடுதல். ஆண்டாண்டு - ஆங்காங்கு. கண்ணா - கருதா.

சுப்பு - அரத்தினம் - சுப்புரத்தினம் . பதிகம் பதினொரு பாட்டுங்கொள்ளலாம்.

சேலம் நகராண்மைக்

கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர்

192. எத்தனைய ரோதமிழர் இந்நாட்டிற் கல்லூரி ஒத்த முதல்வராய் உற்றிருந்தும் - முத்தமிழ்ப் பற்றால் எனையமர்த்தப் பண்பா டிராமசாமி கற்றான் ஒருவனே காண்.

193. உயர்நிலைப் பள்ளிகளில் ஓவா துழந்தே

அயர்நிலை என்னை அழைத்தன் - றுயர்வளித்தான் சேலங்கல் லூரிச் சிறந்த தமிழ்த்தலைமை

மேலான் இராமசாமி.