உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

குமரித் தனிநிலைக்குக் கோண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார்.

373

மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர்.

பாரதிதாசன் பண்பாட்டுப் பதிகம்

181. நாட்டு விடுதலைக்கு நன்றாகப் பாடுவான் ஈட்டு தமிழர்க்குள் இல்லெனலை - வீட்டக் கனகசுப்ப ரத்தினப்பேர்க் கார்முகில் தோன்றி மினுமினுத்துப் பெய்ததுபா மேல்.

182. பாரதிமேற் பற்றினாற் பாரதி தாசனென்று பேர்தனக் கிட்டாலும் பேணாமல் - ஆரியத்தைச் சாடினான் வல்லாங்கு சாராரும் பாராட்டச் சூடினான் வாகையென்று சொல்.

183. ஆனை நடையும் அரிமாப் பெருமிதமும் கோனையும் சாடிக் குமுறுரையும் – தானையே தாக்கினும் அஞ்சாத் தறுகண்ணும் மேலாடைச் சேக்கையும் பாரதிதா சன்.

184. ஆரிய ராட்சியிலும் அன்னார்க் கடிமையராம் பூரிய ராட்சியிலும் புல்லாது - சீரிய

செந்தமிழைப் போற்றிச் செழும்பல் பனுவல்களைத் தந்தனன் பாரதிதா சன்.

185. தெளிதேனில் தீன்கலந்த தெண்ணீர்ப் பதம்போல் எளிதாம் இனிய எழில்கொள் - களிநடையிற் செம்பொற் கருத்துக்கள் சேர வழங்கினான் இம்பர்க்குப் பாரதிதா சன்.

186. இருபதாம் நூற்றாண்டிடை யிணையே யில்லாப் பெருமைசேர் பாரதி தாசன் - ஒருமையுடன் வாழ்நாள் முழுதும் வளரடக்கங் கொண்டுற்றான் வீழ்நாள் விண்ணவனாம் வீறு.

187. தன்னலமும் தன்குடும்பத் தின்னலமும் பேணாது மன்னலமே என்றும் மதித்தொழுகித் - தன்னினமாம் செந்தமிழ் மக்கள் சிறந்தோங்கி வாழ்வதற்கே வந்தனன் பாரதிதா சன்.