உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

383

236. வடபுலம் நீங்கித் தெற்கில் வளமுறு வேலூர் ஆங்கண் திடமிக அரையன் முன்னே திறமைகள் எல்லாம் காட்ட விடலரு விருப்பின் மன்னன் வியந்துபா ராட்டும்போது மடவரிவ் வுலக வாழ்வில் மன்றவென் றமைச்சன் சொன்னான் 237. எத்திறம் அறிதி என்றே இறைமகன் வினவ இன்னே அத்தனை பேரும் சென்றூண் அருந்தியே மீளச் சொன்னால் மெய்த்திறங் காண்பாய் என்று மேதகை யமைச்சன் கூற உத்தர வாகி யன்றே உண்ணுதற் கவருஞ் சென்றார் 238. தங்கிய மனைக்குச் சென்று தம்முணாச் சமைத்தற் கென்றே அங்கவர் ஒவ்வோர் வேலை ஆற்றிட இசையில் வல்லோன் வெங்கழி நெருப்பை மூட்டி வேவுறும் உலையும் ஏற்றிப் பொங்கியே கொதித்தல் கண்டு பொருந்திடத் தாளம் போட்டு 239. இன்னிசை பாடிக் கொண்டே இன்பமுற் றிருந்தகாலை முன்னுற இசைந்து பின்னர் முடுகியே உலையுஞ் செல்லத் தன்னையும் அவமதித்துத் தாளமும் தப்பிற் றென்று கொன்னுறு சினத்திற் சோற்றுக் குழிசியை உடைத்துப் போட்டான் 240. தயிர்க்கெனச் சென்ற நல்ல தமிழிலக் கணியும் ஆய்ச்சி உயிர்க்குறில் நெடிலை நீட்டி ஒலித்ததைத் திருத்திக் கூறிச் செயிர்த்ததன் பின்னுஞ் சற்றும் செவிக்கொளா திருந்த தாலே வயிர்த்ததோர் வெறுப்புக் கொண்டு வாங்குத லின்றி மீண்டான் 241. காய்கறி வாங்கற் கென்று கடைக்குப்போய் மருத்துவன்தான் நோய்தரு குறைகள் கூறி நுகருதற்குரிய தேதும்

வாய்பட லின்மை கண்டு வாங்குத லொழிந்து வந்தான் வேய்தர அமைச்சன் விட்ட வினைஞரும் மகிழ்ந்து கண்டார் 242. நெய்யினை வாங்கச் சென்ற நெடுமொழித் தருக்கி வாங்கிக் கையினிற் கொணரும் போதே கருதிய நிலைக்க ளத்தின் ஐயம தொழிக்கத் தொன்னை அடிமிசை யாகச்சாய்த்தான் ஒய்யெனச் சிந்தி நெய்யும் ஒழிந்ததால் உண்மை மீண்டான் 243. இலையது பறிக்கச் சென்றோர் எழில்மர மேறப் பாதி

நிலையினிற் பல்லி சொன்ன நிமித்தமோ தீதா மென்று கலையுறு கணியன் ஆங்கே கைசலித் திருந்து பின்னும் மலைவுதீ ராமை யாலே மரத்தினின் றிறங்கி வந்தான்