உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




384

பாவாணர் கடிதங்கள்

244. ஒற்றரால் அமைச்சன் இந்த உறுசுவைத் செய்தி யெல்லாம் உற்றபின் அரைய னின்பால் உரைத்தனன்அவனு அந்தக் கற்றவர் சொல்லால் உண்மை கண்டவர்க் குரிய ஐந்து நற்றிற உழையன் சொல்லை நம்பியே நாட்டை ஆண்டான் 245. சொல்லிய கதைதான் நம்பும் தோரணை யற்ற தேனும் ஒள்ளிய புலமைக்கிந்த உலகியல் அறிவும் வேண்டும் பள்ளியின் கல்வியெல்லாம் பயன்படா புள்ளிக் கென்னும் தெள்ளிய உண்மை யேனும் தேற்றுதற் குதவு மன்றே

நன்றியுள்ள சேவகன்

பாடல்கள்

246. தரையுலகில் இருகண்டம் தழுவு பேரிசியாவில் உரைபலநற் செல்வமெலாம் ஒருங்குடைய நற்பேற்றுத் துரையொருவன் ஐங்காதத் தொலைவிலுள்ள உறவினரைக் கரையறுமெய்க் காதலினால் கண்டுவரக் கருதினனால் 247. நாற்கலிமா வையமதில் நாயகன்தன் குடும்பமுடன் ஏற்கமிக வசதியாய் ஏறியிருந் தமர்ந்ததற்பின் கோற்கையனாய்ச் சேவகனுங் குதிரைகனை வியங்கொண்டான் நூற்படுபேர் நளனென்று நோக்கியவர் வியப்புறவே

248. நாடிறந்து காடுதனை நண்ணியபின் ஓநாய்கள் ஓடிவந்து நெருங்கியதும் ஒருகுதிரை அவிழ்த்துவிட்டுச் சாடியதைக் கொன்றவையும் சதைமுழுதுந் தின்னுமுனம் கூடியதோர் நெடுந்தூரம் கொடுவுய்த்தான் சேவகனும் 249. தின்றவுடன் ஓநாய்கள் திரும்பவும்வந் ததுகண்டு பின்னுமொரு குதிரையினைப் பிணியவிழ்த்து விட்டவுடன் என்றுமிலா வேகத்தில் இயக்கிவிட்டான் சேவகன்தான் அன்றவனின் அகநிலையை ஆண்டவனே அறிந்தவனாம் 250. பேயுற்ற கொடுமையொடும் பெயராத யானைத்தீ நோயுற்ற பசியினொடும் நொடியில்மீண் டோநாய்கள் ஏயுற்ற கடிதில்வந் தெய்தியதைக் கண்டுமனம் தேயுற்ற சேவகனும் திரும்பவுமொன் றவிழ்த்துவிட்டான் 251. விட்டவுடன் வையத்தின் வேகத்தை யாரறிவார் பட்டறிந்த நிகழ்ச்சிகளின் பயனாகச் சேவகனின்