உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

4. பாவாணர் வீறு

சிலர் நகையாட்டாகச் சொல்வதாகவோ நயமாக நவில் வதாகவோ எண்ணிக்கொண்டு, “நெஞ்சில் கை வைத்துப் பார்த்தேன்; கொதிப்புண்டாகியது; சற்றே கையைக் கீழே இறக்கினேன்; வயிற்றில் கைபட்டதும் கொதிப்பு அடங்கிப் போயிற்று" என்பர். வயிற்றுப் பாட்டை நோக்கிச், செம்மாந் தெழும்பிய உணர்வை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அடங்கி விட்டாராம்! உண்மையான உணர்வாளராயின் அவரால் அடங்கியிருக்க முடியாது! போலிமை புகுந்த உணர்வின் புகலு கையே ஈது!

பாவாணர் சொன்னார்; சொன்னார்; 'எனக்கு நெஞ்சும் உண்டு; வயிறும் உண்டு; இவற்றுக்கு மேலே தன்மானமும் உண்டு.

இத்தகைய பாவாணர் வீறு அவர்க்கு அலைவையும், கலைவையும் ஆக்கியிருக்கலாம்; அவ்வலைவாலும் கலைவாலும் தமிழும் தமிழினமும் பெற வேண்டும் பேறுகளை முற்றாகப் பெறவொண்ணாமை நேர்ந்ததேயன்றி, அவரைப் பொறுத்த அளவில் கேடு செய்துவிடவல்லன அல்லவாம்! கேடு என்று எண்ணும் ‘உணர்வாளக்கு’, வீறு எங்கே இருந்து வீறும்?

பாவாணர் வீறு பற்றிக் கடிதங்களால் அறியப்படும் செய்திகளைக் காண்போம்.

66

'கழகம் கைகொடுப்பின் நான் கிளர்ந்தெழுவது தேற்றம்” “சிறு நூல்களையெல்லாம் இந்த ஆண்டில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டில் எத்துணையோ பெரு நூல்களை எழுதக் கருதுகின்றேன்

992

“தமிழின் தொன்மையை எடுத்துக்காட்டும் நூல் அஃதொன்றே (முதற்றாய் மொழி) என்பது அச்சிடும்போது தெரியவரும்

66

993

கழகம் என் நூல்களை வெளியிட்டு என்னை ஆதரிக்கு மாயின் அடுத்த ஆண்டுக்குப்பின் ஆசிரியர் வேலையைக் கூட விட்டு எழுத்து வேலை செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன்.”4

1. 10-3-31 (வ.சு)

3. 27-7-31 (621.5)

2. 10-3-31 (621.5)

4. 24-7-31(621.5)