உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

29

தூங்கிக்கொண்டும் நீட்டிக்கொண்டும் இருந்தோமாயின் நம் காரியம் கைகூடுவது அரிது. மாநாட்டிற்கு வேண்டியவை முன்னர் 1 சுவடியும் பின்னர் 1 புத்தகமுமாக 2 சுவடியில் வேங்க எல்லைக்குச் சான்றுகளையெல்லாம் சுருக்கமாய்க் கூறி அச்சிட்டுப் பெருமக்கட்கெல்லாம் அனுப்பிவிடலாம். பொங்கல் விடுமுறைக் குள்ளேயே பண்டிதர் ஆனந்தத்தையும் இராசமாணிக்கம் பிள்ளை அவர்களையும் கொண்டு எழுதுவித்து உடனே அச்சிட்டு விடவும். நாய்க்கர் ஈரோட்டில் இருக்கிறார். எழுதிக் கேட்க

66

11

எங்கள் கல்லூரி நகராண்மையைச் சேர்ந்ததாதலால் அரசியல் திட்டம் எதையும் மறுக்கக் கூடாதென்றும் மறுப்பின் வேலை போய்விடுமென்றும் எங்கள் கல்லூரித் தலைவர் சொல்லி விட்டார். கூட்டத்திற்குச் சென்று மீளலாமென்றாலும் 7ம் s எங்கள் கல்லூரித் திறப்பாதலாலும் விடைத்தாள் திருத்தி அன்று கட்டாயம் கொடுத்துவிட வேண்டுமாதலாலும் வேலை நெருக்கடி பெருந்தடையாயுள்ளது. அன்று கூட்டத்தில் என்ன முடிவு செய்யினும் எனக்குடன்பாடே. ஆயின் வெளிப்படை யாய் எம் முயற்சியிலும் கிளர்ச்சியிலும் கலந்து கொள்ள யலாதவாறுளது, என் அலுவல். இதற்கென் செயலாமென் றெண்ணிக் கொண்டிருக்கிறேன்.”

66

"12

சங்கரலிங்க நாடார் வடக்கிருந்தென்ன? சின்னச்சாமி தீக்குளித்தென்ன? தமிழன் திருந்துவதாயில்லை?”13

பேரியங்கிக் கட்டணம் இல்லாக்காலும் மாணவர் ஒருங் கிணைந்த கூட்டத்தில் உரையாற்றுதற்குப் பாவாணர் வரு வாராம்! கைம்முதல் பெருக்கமா, இவ்வுணர்வை எழுப்பியது? தொண்டின் உறைப்பே எழுப்பியதாம்! நகராண்மைக் கல்லூரிப் பணி, பொதுப்பணிக்கு இடராக இருப்பதால், ‘என் செயலாம் என்று' எண்ணிக்கொண்டிருக்கிறாராம்’! ‘மாகாணப் பிரி வினைக் கருத்திலே அந்நாளில் பாடுபட்டுப் பணிசெய்த தூண்டு தலாய் நின்ற தமிழ்ப் பேராசிரியர் பாவாணரைப் போல் எத்தனை பேர் இருப்பர்?

-

11. 10-1-46 (621.5) 13.13-6-64 (வ.சு)

12. 10-1-46 (வ.சு)