உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

யில்லாமையால் கழகஞ் செல்லவில்லை. யான் என் கடமையைச் செவ்வனே செய்துவிட்டேன். யாரை வேண்டுமாயினும் கேட்டுப் பார்க்கலாம். வேறெதற்குத் தடை நேரினும் மறைமலையடிகள் தடையுண்ணா தென்றிருந்தேன். ஆயினும் அடிகள் தமிழ்ப் புலவரிடையும் சு.ம. பண்டிதரானார். இத்துணை அண்மைக் காலத்திலேயே அவர் மறக்கப்படுவார் அல்லது புறக்கணிக்கப் படுவார் என்று கனவிலும் கருதவில்லை. மலை சாய்ந்ததென்று புகழ்ந்தவரெல்லாம் அலையோய்ந்ததென்று மகிழ்கின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தலைமை தாங்கி வழிகாட்ட எங்ஙனம் ஒருவரில்லையோ அங்ஙனமே புலமைத் துறையிலு மல்லை. தக்காரொருவர் தலையெடுக்காவிடின் தமிழ்நாடு அமிழ் நாடே

999

கல்வியமைச்சர் எங்கள் கல்லூரியில் ஏரணம் வரலாறு ஆகிய இரு பாட நூல்களையும் தமிழில் கற்பிக்கப் பணித் திருப்பதால் அவற்றுள் ஆங்கிலம் மட்டும் கற்ற ஆசிரியர்கள் கற்பித்தற்கு அரிதான ஏரணத்தை இரவு பகலாய் மொழி பெயர்த்து வருகின்றோம். இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்து விடும். குறியீடுகள் பெரும்பாலும் தனித்தமிழில் அமையப் பெறுகின்றன.10

"இற்றைச் செய்திகளையும் நிலைகளையும் நோக்கும் போது இம்மாத இறுதிக்குள்ளேயே எல்லை மாநாட்டை வைத்துக் கொள்வது நலமென்று தோன்றுகின்றது. பாராளு மன்றத் தூதுக் குழு 15ம் ௨ வரை லாகூரிலிருக்கிறது. பின்பு இரு பகுதிகளாய்ப் பிரிந்து பெஷாவருக்கும் அமிருதசாருக்கும் சல்கிறது. வடக்கேயே இத்துணை நாள் தங்கினால் தெற்கே பம்பாய் பார்க்கவும், திருவாங்கூர் செல்லவும் சென்னை வரவும் இம் மாத இறுதியாகிவிடும். பெப்ரவரித் தொடக்கத்தில் நடக்கும் கூட்டத்தை இம்மாத இறுதியில் வைத்துக் கொள்வது இயலாத தன்று. பா.தூ. குழு அதிகார முறையில் வராவிட்டாலும் இந்தியா வின் பின்னிலை அமைப்பிற்குப் பெரிதும் காரணமாயிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. தூதுக் குழு சென்னைக்கு வரும்போது அவர்கள் கண்ணாரக் காண்பது போல, பின்னர் நடக்கும் எம் முயற்சியும் வலியுறாதென்பது தேற்றம்.

L

குழு டில்லிக்குத் திரும்பியவுடன் ஆந்திர மகாசபைத் தலைவராய் விஜயா என்பவர் காணச் செல்கிறார். நாம் இன்று

9. 15-7-51 (வ.சு)

10. 10-1-46 (621.†)