உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




392

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

264. தங்கணத்தார் அல்லார்முன் சொல்லல் சொலினஃதாம்

அங்கணத்துள் உக்க அமிழ்து.

-திருக். மர. 720

265. தாழ்வுணர்ச்சி நீங்கும் தகைமைக்கண் தங்கிற்றே வாழ்வுணர்ச்சி காணும் வழி.

-முதன்மொழி 1.3;2.

மக்கள் வாழ்வில் குறள் மாறியமைதல்

266. போகா றளவிட்டி தாயினுங் கேடில்லை

ஆகா றகலாக் கடை

என்று மக்கள் வாழ்விற்குகுறள் மாறியமையும்- ம.வி.110.

267. புக்கில் அமைந்தின்று கொல்லோ சிலரிடைத் துச்சல் இருந்த தமிழ்க்கு

-செ.ப.க.க.அ.மு.

சீர்கேடு 3 20.8.61.

268. ஆய்விலா தாரும் அறிவுடையார் ஆய்ந்தார்முன் வாய்திறவா துள்ள விடத்து

-செ.ப.சீ.27.

கண்ணகி செய்தியைச் சீத்தலைச் சாத்தனார் சொல்லக் கேட்டவுடன், இளங்கோ வடிகட்கு மூவுண்மைகள் தோன்றின. அங்ஙனமே சென்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டுப் பேராயம் படுதோல்வியுற்றவுடன் நடுநிலையாளர்க்கெல்லாம், மூவுண்மைகள் தோன்றின. அவை,

269. தமிழ்பிழைத் தோர்க்குத் தமிழ்கூற் றாவது, ஏமாற் றென்றும் இயலா திருப்பது, தன்வினை பின்னே தன்னைச் சுடுவது

என்பன.