உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

278. வண்ணனைக் கூற்று வழூஉ மொழியியலை விண்ணவர் போற்றினும் வேண்டற்க - எண்ணிப் பகுத்தறிவால் அந்நூல் செய் பைந்தமிழ்க் கேட்டை வகுத்தவர லாற்று வழி

279. முப்பல் கலைக்கழக முட்டாத் தமிழ்த்துறையும்

செப்புந் தனித்தமிழர் சேர்ந்திடுக - தப்பின்

அடியோடு முக்கழகும் ஆரியம் நீங்கி முடிசூட முத்தமிழ் முந்து.

முடிபு

280. தேவ மொழியென்று தேரின் உலகிலில்லை யாவும் நிலமக்கள் யாத்தனவே - சாவினால் தெய்வ நிலைமையெனின் தேவர் உலகினையே எய்தி விடுதல் இயல்பு

281. ஆரியம் தேவமொழி யாகு மெனின்மேலை ஆரிய மெல்லாம் அதுவாகும் - ஆரிய

நான்மறை தெய்வமெனின் நானிலத் தேனைமொழி நூன்மறை மேலாம் நுவல்

282. இந்திய ஐரோப் பியமென்னும் மாமரத்தின் முந்திய ஆணிவேர் முத்தமிழாம் - பிந்திய உச்சாணிக் கொம்பே உரப்பும் வடமொழியாம் அச்சேது மின்றி அறை.

283. இயல்பே திரிபே எனுந்தமிழன் பாங்கில் இயல்பே தமிழாகும் என்க - அயலாம் திரிபே திரவிடமாம் தேரினதன் முற்றே மருவும் வடமொழி மாண்பு

284. வடமொழியே தெய்வ வகைமொழியேல் அந்த மடமொழியின் மூலத் தமிழாம் -திடமொழி

தெய்வத்தின் தெய்வத் திருமொழி யென்றின்றே உய்வுற்றுச் சீராக ஓம்பு

285. சொற்பொருள் யாப்பும் சுவையாம் அணியியலும் நற்புல நூலுமே நல்வளமாம் - வற்பொலியின்

395