உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




396

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

மூச்சும் கனைப்பும் மொழியின் சிறப்பாயின்

ஓச்சுங் கழுதை உலகு

286. எல்லா வகையாலும் எண்ணினால் இவ்வுலகில் எல்லேர் தமிழுக் கிணையில்லை - அல்லாச் சிறந்த மொழியெல்லாம் செந்தமிழ் போலன்றி இறந்த மொழியாம் இன்று

287. ஆரிய ஏமாற்றிற் காளாய் அடிமைமடப் பூரிய வாழ்வழுந்திப் போந்தமிழர் - சீரிய செந்தமிழ் மானஞ் சிறந்துரிமை பெற்றுயர்க முந்திய தென்னோர் முறை

288. ஒருமுறை ஏமாறின் ஏமாற்றி குற்றம் மறுமுறை ஏமாறி குற்றம் -பலமுறையும் ஏமாறும் பேதை இயல்பின் தமிழனெனின் ஆமாறே இல்லை அறி

289. மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க - பழியாய்த்

தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்காண் முன்போல் தமிழுயரத் தானுயர்வான் தான்

290. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி

மிகுத்ததனால் இல்லையொரு மேன்மை - வகுத்தநன்னூற் கற்றைகளைத் தின்றாலும் காளவாய் நல்லறிவு பெற்றிடுமோ எத்துணையும் பேசு

291. உடம்பளவில் மாந்தர் உயர்திணை யராகார் மடந்தவிரும் நல்லறிவு மானம் - திடம்பெறவே தாழ்வுணர்ச்சி நீங்கித் தகுநற் றொழிலொழுக்கம் வாழ்வுயர்ச்சி காணும் வழி

292. அடிமைத் தனத்தின் அடிநீக்கி இன்றே குடிமைத் தனந்தமிழா கொள்க - மடிமை இருக்குந் தமிழையும் இல்லா தாக்கும் தருக்கும் பெயருந் தப.

293. செங்கதிரின் நீண்மறைவிற் செந்தமிழும் ஆரியத்தால் மங்கி மறைந்தநிலை மாய்ந்ததினால் - எங்குமினி