உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

மூல மொழியென முத்தமிழே ஆளுகின்ற காலம் அணுகியதே காண்.

294. குப்பை உயர்ந்தது கோபுரந் தாழ்ந்ததெனத் தப்பி வடமொழி தான்கவர்ந்த - செப்பத் தமிழனையை விட்டினித் தானதற்குத் தாழ்க குமரியனை யென்றதைக் கொண்டு.

295. மறை மலை மாணடிகள் மாபெயர் வாழி நிறைமொழி முத்தமிழ் வாழி - இறைமொழியாம் என்னும் வடமொழியும் ஏமாற்றா தெந்நிலத்தும் மன்னுக நூன்மொழி மற்று.

வழிபாட்டு மொழி

296. ஆரியம் முந்தி அருந்தமிழைத் தாழ்த்தியதால் நேரெதிர் இந்திவந்து நின்றதுகாண் - ஓரடியாய் ஆரியம் இந்தி அகல வழிபாடு

சீரிய செந்தமிழில் செய்.

397

வாழ்த்து

297 வான்வாழி வாய்மை வளமுத் தமிழ்வாழி ஆன்வாழி அன்போ டறம்வாழி - கான்வாழி நூல்வாழி நல்லறிவு நுண்புதுமை ஆய்வுசெங் கோல்வாழி பல்லரசுக் கூட்டு.

இ.த.எ.கெ.55

-த.இ.வ.326