உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

37

பாட்டுக்கள் அடங்கிய இசைத் தமிழ்க் களஞ்சியமும் முந்தி வெளிவரும். அதன்பின் தமிழியக்கம் தொடங்கும்.8

66

‘என் ஆராய்ச்சி நூல்களையும் இந்தியெதிர்ப்புப் பாடலையும் வெளியிட்டுத் தமிழியக்கம் தொடங்கி ஆரியரையும் ஆரிய அடிமைப் பேராசிரியரையும் அம்பலத்திற் கிழுத்துத் தோற் கடித்தும் மேனாட்டார்க்கு ஒப்பத் தமிழ் திராவிடத் தாயும் ஆ ரிய மூலமும் என்பதை நாட்டியும் குமரிமுதல் சென்னை வரை நாளுக்கொரு நகரில் தங்கிப் பொதுமக்கட்கு உண்மை வரலாற்றையெடுத்து விளக்கியும்தான் தமிழைக் காக்க முடியும். இத்திட்டத்தை முப்பதாண்டுகட்கு முன்பே விடுத்தேன். ஆயின் என் நூல்களை வெளியிடப் பொருளுதவுவார் ஒருவருமில்லை.”

999

"என் தமிழ்ப் போராட்டம் அண்மையில் தொடங்கும் எனக்குப் பின் தமிழையும் உண்மையான மொழிநூலையும் வளர்க்கப் பன்னிரு மாணவரை அமர்த்துவேன்.”10

பாவாணரே ஓர் இயக்கமாக இருந்தவர், அவர் இயக்கம் தமிழியக்கம். அவர் பேச்சும் எழுத்தும் முறையே தமிழியக்கப் போர்ப்பறையும், வெற்றிப் பறையுமாம்.

குமரிமுதல் சென்னைவரை நாளுக்கொரு நகரில் தங்கிப் பொதுமக்கட்கு உண்மை வரலாற்றை எடுத்து விளக்கும் நோக்கம், அறிஞர் கால்டுவெல் வரலாற்றுப் பதிவாக இருக்கலாம்! “எனக் குப் பின் தமிழையும் உண்மையான மொழிநூலையும் வளர்க்கப் பன்னிரு மாணவரை அமர்த்துவேன்” என்னும் எண்ணமும் எண்ணிக்கையும், தொல்காப்பியரின் ஒரு சாலை மாணவர் பற்றிய செய்தியடிப்படையில் நேர்ந்தவை ஆகலாம்.

8. 15- கும்பம் 1995 (வி.பொ.ப.) 9.15-கும்பம் 1995 (வி.பொ.ப.) 10.20-1-68 (வீ.ப.கா.க.)