உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

6. வேர்ச்சொல் போலிகை (மாதிரி)

வேர்ச்சொல் வரிசை சிலவற்றை எழுதி வெளியிட விரும் பினார் பாவாணர். அவர்தம் விருப்பத்தைக் கழக ஆட்சியாளர்க் குத் தெரிவித்தார். கழக ஆட்சியாளர் வேர்ச் சொல் வரிசைக்குப் போலிகை வரைந்து அனுப்புமாறு கேட்டார். அதற்குப் பாவாணர் விடுத்த மறுமொழியும் போலிகையும் வருமாறு.

8, புத்தூர் மந்தை,

திருச்சி

31-7-40

"வேர்ச்சொல் வரிசையைப்பற்றி நீங்கள் மாதிரி கேட்பது வியப்பாயிருக்கிறது. உங்கள் ஐயத்தையும் குறிக்கிறது. அறிஞரை நம்பி அவர்வயின் நல்ல வினையை ஒப்புவிக்கும் திறன் இன்னும் 'நம்மவர்க்கு ஏற்படவில்லை. ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும் மாதிரி தருகிறேன்'

இறு-இறுதல் வளைதல், முடிதல், மடிதல், சூரியன், பயிர்கள்: வளைவதையும் பின் முடிவதை அல்லது மடிவதையும்; வளைவதையும் முடிவதையும் அது மடிதல் போல்வதையும் நோக்கு.

ஒ.நோ : சாய்தல் - வளைதல், இறத்தல் சாயும்காலம் Eve-Evening சாய் -சா-இறு-இற.

முடம்-வளை, முட-முடி-மட(ங்கு) மடி. இறு+ஐ றை- வளைந்த முன்கை.

ஒ.நோ : elbow.

இறு+ஆ=இறா-இறால் இறாட்டு=வளைந்த கூனி

ஒ.நோ.

கூன்+இ=கூனி

குனி-கூன்=வளைவு.

இறால்=தேன் கூடு (வளைந்தது வட்டமானது). இறாட்டி = எரு (தேன் கூடு போன்றது)