உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

வறட்டி என்றும் சொல்லலாம்.

இறுத்தல்

39

சூரியன் மேற்கே அடைதல் அல்லது தங்குதல் இறு+ஐ=இறை, கடவுள் அரசன் (எங்கும் தங்கியிருப்பவன்)

றை+அன் = இறையன்

இறுத்தல்=தங்குதல், பாளையமிறங்கல்.

-

இறுதல்=முடிதல், இறு+உ அல்லது வு இறவு.

இறுதல்=வளைதல் சாய்தல். இறப்பு, இறவாணம், சாய்ந்த தாழ்வாரம். இன்னும் விரிக்கிற் பெருகும்.

இறு என்னும் சொல் இற(ங்கு) என்பதினின்றும் பிறந்தது. இறத்தல்-இறங்குதல்.

இற-இறகு-இறங்கு. இற என்பது அண்மையும் கீழ்நிலையும் குறிக்கும். இகரச் சுட்டடியாய்ப் பிறந்தது. சூரியன் கீழேயிறங்கும் போது வளைவதனால் இறங்கற் கருத்தில் வளைவுக் கருத்தும் முடிவுக் கருத்தும் தோன்றின வென்றறிக.

ங்ஙனம் எத்தனை சொற்களுக்கு வேண்டுமானாலும் எழுதலாம். யான் விரிவாயும் விளக்கமாயும் எழுதினால் நீங்கள் உங்கட்கு வேண்டியவாறே சுருக்கிக் கொள்ளலாம்.' வரைந்தார் பாவாணர்.

என்ற

வேர்ச் சொல்லாய்வு புலமக்கட்குரியது, புலமக்களுள்ளும் அதன்பால் ஆர்வமிக்கார்க்கும் அதன் பயனுணர்ந்து அறிந்து கான்ன விழைவோர்க்குமே இன்பம் சேர்ப்பது. அதனை ஐயமறத்தெள்ளத் தெளிவாக்கிக் கொள்ளல் அச்சீட்டுக்கு வாய்ப்பாம் என்று கருதினார் கழக ஆட்சியாளர் வ.சு. ஆதலால் மீண்டும் வேர்ச்சொல் பற்றி விளக்கம் வேண்டினார்.

மீண்டும் வேண்டிய வேர்ச்சொல் விளக்கத்திற்கு 29-8- 40இல் மறுமொழி விடுத்தார் பாவாணர்.

"வேர்ச்சொல் வடிவைப்பற்றி விளக்கி எழுதியும் நீங்கள் இன்னும் தெளியாதிருப்பது ஐயத்திற்கிடமாயிருக்கிறது. ஒரு பக்கத்திற்குள் 4 வேர்ச் சொற்றிரிபுகள் அடங்கமளவு (25 பக்கம் வருமாறு) 100 முக்கியமான வேர்களைப்பற்றி எழுதியனுப்புவேன். (உ-ம்.) வேள்-வேண் (வேண்+அவா=வேணவா).

வேள்+து=வேண்டு. வேள்+வி=வேள்வி.