உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

வேள்+கை=வேட்கை.

வேள்+தம்=வேட்டம்.

வேள்(பெ).

வேள்+ஆண்=வேளாண்.

வேள்+ஆண்மை=வேளாண்மை.

வேள்+ஆன்=வேளான்.

வேள்+ஆளன்=வேளாளன்.

வேள்+கோ=வேட்கோ.

வேட்டம் + அன்=வேட்டுவன், வேடுவன், வேடன்,

யான் விரிவாக எழுதினால் நீங்கள் வேண்டாததை விலக்கிக் கொள்ளலாம். இனிமேல் இதைப்பற்றி எழுத முடியாது”.

பாவாணர் தாம், 'அறிஞரை நம்பி அவர்வயின் நல்ல வினையை ஒப்புவிக்கும் திறன் வேண்டும்' என்று முன்னமே தெரிவித்து விட்டாரே! அதனால், “இனிமேல் இதைப்பற்றி எழுத முடியாது' என்று சொல்லிவிட்டார்.

14-9-40இல் "வேர்ச்சொல் சுவடி எழுதி முடிந்தது” என்று ழுதுகிறார்.

25-9-40 இல், "வேர்ச்சொற் சுவடியில் 'இறு' என்னும் வேரின் கீழ், இறாட்டி = வட் = வட்டமான எரு என்பது ஓர் உன்னிப்புத் தான். வறட்டி என்ற உலக வழக்குச் சொல் 'வல்' என்னும் வேரடியாயும் வறள் என்னும் பகுதியடியாயும் வந்தது.

வறள்+து=வறட்டு. பிறவினை. வறட்டி=காயவைத்த எரு.

இதைக் குறித்துக் கொள்க” என்று குறிக்கிறார்.

மேலும், “கீழ்மேல் முதலிய சொற்களுடன் கீழோர், கீழை, கிழக்கத்திய, மேலோர், மேலை, மேற்கத்திய முதலிய சொற்களை வேண்டுமாயின் சேர்த்துக்கொள்ளலாம். இங்ஙனமே பிற பெரு வழக்குச் சொற்களும்.

வணங்கு என்பதன் கீழ் வாங்கு வளை என்பதையும் சேர்த்துக் கொள்க” என்கிறார்.

"சொல்வேர்காண் வழிகள்” என்னும் கட்டுரை ஒன்று சிலம்பு 41 பக்கம் 316 இல் உள்ளது. சிலம்பு 39 இல் அம், உல்