உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

Jet=Suprt forth in jets; jet propeled (air craft)=deriving propelsive power from the backward thrust. of high velocity jets of has discharges through regular inner holes from the wings.

நீரை அல்லது காற்றை எறியது என்னும் பொருளில் எறிவான், பீச்சி, சிவிறி என்னும் சொற்களுள் ஒன்றை ஆளலாம், ஆயின் சொல்லும் சிறப்பாயில்லை. பொருளும் நிறைவாயில்லை, ஆதலால் ‘பின்னுந்தி' என்று புனைவதே சாலப் பொருத்தமாம். சொல்லும் நன்றாய் ஒலிக்கிறது. பின்னூக்கிக் காற்றைத் தள்ளி விசையூட்டுவது என்னும் பொருளும் பொருந்துகிறது இதையே அவர்களிடம் சொல்க.

புட்டம் :

ம்

Buttocks என்பதற்குத் தமிழ்ச் சொற்கள். இருப்பு, குண்டி, சூத்து, சூத்தாம்பட்டை, புட்டம். புட்டம் என்பது பிட்டம் எனத் திரியும். ஒப்புநோக்க-புரள்-புறழ், புரண்டை-பிரண்டை.

புட்டம் என்பது புட்டி எனத் திரிந்து பறவையன் பின் புறத்தைக் குறிக்கும். புட்டி எனத் திரியும். ஒப்புநோக்க-புரள்-புறழ், புரண்டை-பிரண்டை.

புட்டம் என்பது புட்டிஎனத் திரிந்து பறவையின் பின் புறத்தைக் குறிக்கும். புட்டி என்பதும் பிட்டி எனத் திரியும். பிட்டம் என்னும் தென் சொல்லையே ப்ருஷ்ட என்று வடவர் திரித்திருக்கின்றனர். அத்திரிவையே இன்று மூலமாகக் காட்டி யிருப்பது தமிழ்ப் பேராசிரியரின் அறியாமை, அடிமை, பேடிமை, தந்நலம் ஆகியவற்றை உணர்த்தும்.

Buttock என்னும் ஆங்கிலச் சொல்லில் butt என்பதே முதனிலை. ocks என்பது ஈறு. But=புடைப்பு, பருமன, இச்சொல் இதே பொருளில் ஆங்கிலத்திலும் அதற்கினமான செருமன் தச்சு (Dutch) சுவீடன் மொழிகளிலும் வழங்குகின்றது. தமிழிலும் இதே பொருளே. புடைத்திருப்பது புட்டம். குண்டாயிருப்பது குண்டி.

குண்டி என்பது சற்று இடக்கர். சூத்து, சூத்தங்காய் என்பன மிக இடக்கர். ஆதலால் அவை அவையல் கிளவிகள். கற்றா ரொடு பேசும்போதும் கடியத்தக்கன. இருப்பு என்பது இலக்கிய வழக்கு. புட்டம் என்பது இருவகை வழக்கும். ஏனைய உலக வழக்கு. குண்டி என்பது சிறப்பாக நெல்லை வழக்கு. Ock என்பது முதலிற் குறுமைப் பொருள் தந்து பின்பு பொருள் இழந்தபின் ஒட்டு.