உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன் தகவல் :

47

தகவல், என்பது. dakhal என்னும் அரபிச் சொல், Information Intimation என்பது அதன் பொருள். சேதி (செய்தி) என்பது அப்பொருளிலேயே வழங்குகின்றது. எ-டு. வந்தவுடன் சேதி யனுப்பு, அதைப்பற்றி ஒரு தகவலுமில்லை, அதைப்பற்றி ஒரு

தெரிவிப்புமில்லை.

தருமம் :

தருவது தருமம் என்பதுபோற் பொருந்தப் பொய்த்தலும், பொருந்தாப் பொய்ததலுமாக, சில மொழியாராச்சியில்லாப் பொறுப்பற்ற தான்தோன்றிப் பதடிகளின் வெற்றுரைகளைக் கொள்ளற்க. தோல் தமிழகத்ததாயினும் அதனாற் செய்யப்படும் பாதக் கூடு மேனாட்டதே. அங்ஙனமே மூலம் தமிழாயிருப் பினும் சொல்லளவில் சில வட சொல்லே.

திணை :

ஐந்திணை நிலப் பெயர்கள் நிலத்திணைபற்றியவையே. திணை என்னும் சொற்கு ஒழுக்கம் எனல் வழிப் பொருளே, முதற்பொருளன்று.

தூரி :

மருதம் சான்ற மருதம்=மருதத்திணை கான்ற மருத நிலம்.

தூரி=ஊஞ்சல். இது தூய தென் சொல். வடமொழியில்

இல்லை.

66

ஊசல் ஊஞ்சலும் தூரியுமாகும்” என்பது பிங்கலம். (அனுபோகவகை 569) கயிற்று வளையத்திற்குள் தூர்ந்து (புகுந்து) ஆடுவது தூரி. வழங்காமையினாலேயே பல சொற்கள் அருஞ்சொற்கள் ஆகின்றன.

பின்னுந்தி :

தங்கள் நண்பரான ஊராட்சியலுவலர் அவர்கள் என் அறையில் இருந்தபோது jet வானூர்திக்குத் தமிழ்ச் சொல்

கேட்டார்கள்.

L. jace, jact=to throa; F.jet, E.jet. n=Stream of water, Steam, gas etc.

shot forward or upwards esp; from small operning.