உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஏமாற்றுண்ட ஏமாளியைரெல்லாம் இத்தகைய கொடைகளை அடிக்கடி செய்து வந்தனர். அரண்மனைப் பொக்கச சாலை களில் அளவற்ற பொன்னும் மணியும் குவிந்து கிடந்ததனால் அரசர் இவ்விழப்புகளைப் பொருட்படுத்தவில்லை. அவற்றிற் கீடாகப் பிராமணப் பிறவியும் மறுமையில் நற்பதவியும் இறைவன் திருவருளும் கிட்டுமென்று நம்பிப் பெருமகிழ்ச்சியும் பொந்திகை யும் (திருப்தி) கொண்டனர். இத்தகைய ஆரிய ஏமாற்றுக்களும் தமிழரும் திராவிடரும் ஏமாறியடைந்த இழப்புக்கேடும் என் 'தமிழ் வரலாறு’ "தமிழர் மதம்' என்னும் நூல்களில் விளக்க மாகக் கூறப்பெறும்.

மதியம் என்பது மத்தியான (Madh-yahna) என்னும் வட சொற்றிரிபு. உச்சிவேளை, உருமம், நண்பகல் என்பன தமிழ்.

வ. மத்ய (Madhya-த-மையம்.) நடு, நடுவம் நடுவண் என்ற முச்சொற்களுள் ஒன்றையே வழங்குதல் வேண்டும். நடுவம் மிகப் பொருந்தும்.

மூத்தோர்:

Senior என்பதற்கு மூப்பர் என்று

சொன்னேன். திரு. செல்லப்பனார் மூத்தோர் என்றார்கள். அதுவே சரி, ஆகவே மாணவர் நால்வகைப் பருவத்தையும் கீழ்இளையோர், இளையோர் மூத்தோர், மேல்மூத்தோர் என்றே குறிக்கச் சொல்க.

வேய்தல் :

வேய்தல்=முடியணிதல். வேய்ந்தான்

=

வேந்தன்.

கொன்றை வேந்தன்-கொன்றை மலரை முடியில் அணிந்தவன்

(சிவன்).