உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

51

8. மொழியாக்கம்

பாவாணர் கடிதங்களில் மொழியாக்கச் சொற்கள் பல இடம்பெற்றுள்ளன. இயல்பாக அன்பர்களுக்கு எழுதப்பட்ட செய்திகளின் இடையே வந்த மொழியாக்கச் சொற்கள் சில. அவற்றைத் தொகுத்துத் தமிழ்ச் சொல், முன்னாவும், அதற்கு உரிய வேற்றுச்சொல் பின்னாகவும் அமைத்து அகர முறையில் தரப்பெற்றுள. ஆங்கிலச் சொல், வடமொழிச் சொல், உருதுச் சொல் எனச் சிலவகைச் சொற்கள் இப் பட்டியில் இடம் பெற்றுள. ஒரு சொல்லுக்குப் பல சொற்களும் மொழியாக்கமாக அமைந்துள. மிக அரிதாகச் சிறுவிளக்கம் உடைய சொற்கள் தனிப்பட்டியாக அமைக்கப்பெற்றுள. பாவாணர் எழுதிய கடிதங்கள் எல்லாவற்றையும் தொகுக்கும் ஒருவாய்ப்புக் கிட்டி னால் இன்னும் பன்மடங்குச் சொற்களுக்கு மொழியாக்கம் காணக்கூடும் என்பதை இத்தொகுப்பு சுட்டுகின்றது.

1

த்தொகுப்பில் அமைந்த சொற்களுள் செம்பாதி திரு. நா. எழில்மகிழ்நர் அட்டைகளில் கண்டவை. திரு. மி.மு.சின்னாண்டார், திரு. வி. பொ. பழனிவேலனார், திரு. வி.அ. கருணைதாசன், திரு. பா.நாராயணர், திரு. தமிழ்க்குடிமகனார், திரு. வீ.ப.கா. சுந்தரனார், நெய்வேலி பாவாணர் தமிழ்க்குடும்ப அன்பர்கள் ஆகியோர்க் குப் பாவாணர் எழுதிய கடிதங்களில் கிடைத்தவை மற்றவை. எனக்கு எழுதிய கடிதத்திலுள்ளனவும் உண்டு.

மற்றைப் பகுதிகளில் இன்னார்க்கு எழுதப்பட்ட கடிதம் என்னும் சுட்டும், நாளும் உண்டு. இப்பகுதியில் அவை இல்லாமை யால் இக்குறிப்பு வேண்டிற்று என்க.

அடங்கல் நாடுகள் = சர்வதேசம்

அண்ணாவி = Champion

அண்ணாவயம் = Championship

அணிகலம் = ஆபரணம்

அதிகாரச் சான்றுடன்

அதிகார பூர்வம்

1. சொல்லாக்க விளக்கங்கள் என்னும் தலைப்பைப் காண்க..