உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

61

9. பிழையும் திருத்தமும்

பாவாணர், மொழிநிலையில் தாம் காணும் பிழை பாட்டை எவர் செயினும் கண்ணோட்டமின்றிக் கடிந்து எழுதுவர். அக்கடிவு மொழி மேல் கொண்ட கனிவின் பாற்பட்டதேயாம்! தவறும் குழந்தையைத் தட்டிக் கேட்கும் தாய்மைத் தகைமை அன்னது அது! அப்படி அவரன்ன புலமையரும் கொள்ளாக் கால் மொழியின் நிலைமை என்னாம்? தமிழுக்கு அதிகாரியாம் அவரனையர் தகவால்தான் மொழி மாறாமலும் மயங்கா மலும் ஒரு நிலைத்தாய் இயல்கின்றதாம்!

பாவாணர், தாம் இயற்றி அச்சிடும் நூல்கள் பிழையற்று வருவதற்குப் பெரிதும் விரும்புவார். அப்படிப் பிழை நேர்ந்து விடின் திருத்தப்பட்டி தருவார். நூல்களில் திருத்துக் கொள்ள அட்டையும் வரைவார். கட்டுரையில் வந்த அச்சுப் பிழையை மாற்ற அக்கட்டுரை வெளிப்பட்ட ‘இதழின் அடுத்த இதழிலே திருத்தமும் செய்கிறோம்' என்பாரைக் கண்டித்துக் கூறுவார், அவர் இனையர் இன்னர் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நெஞ்சில் பட்டதை நேரில் கூறுதலும் சீருற எழுதுதலும் அவர்க்கு ஊறிப் போன செயற்பாடுகள். தம் நூலிலும் தம் கட்டுரை அல்லது கடிதங்களிலும், பிறர் கடிதங்களிலும் பாவாணர் கண்டு திருத்திய பிழையும் திருத்தமுமாக வருவன இப்பகுதியாம்.

ஆதி ஆங்கு

66

'அகர முதல வெழுத்தெல்லா மாங்குப் பகவன் முதற்றே யுலகு

என்றேயிருக்கலாம். ‘ஆங்கு’ உவம உருபு.

‘பகவன்’ தென் சொல்லே. பகுத்தளிப்பவன் (படியளப் பவன்) என்பது பொருள். வட மொழியிலும் அஃதே. 'பதி' என்பதை வட மொழியில் ‘bhaga' என்னும் சொற்கும் வட மொழியில் இதுவே வேர். உடமை, புகழ் முதலிய அறுகுண முடையான் என்பது பிற்காலத்தார் பொருந்தப் பொய்த்தலாம்.