உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

பண்டையுழவன் தன் விளைவை அறுகூறிட்டதனாலும், பகுசொல் ஆறுறுப்பிடைமையாலும் பகம் என்னும் பொருளுண்டாயிற்று.

பகம். 1

1

விரற்கிடை

எழுத்துகள் என்பது புணர்ச்சிப் பிழை, விரற்கடை என்பது விரற்கிடை யென்றிருத்தல் வேண்டும். நாட்டியம் என்பது வடசொல் வடிவு. நடம், நடனம் என்பவே தமிழ்.

'ஒவ்வோர் நாளிலேயே' என்பதில் 'நாளிலேயே' என்பது நாளிலும் என்று முற்றும்மை இருத்தல் வேண்டும்.2

இயல்புப் புணர்ச்சி

2-ஆம் வேற்றுமை விரி நேரடியாய் வலியோடு புணர்ந் தால் தான் வலிமிகும். ஏ இடைச்சொல் டையிட யிட்டால் வலி மிகாது. கற்றாரைக் கொண்டு என்பது சரி. கற்றாரையேக் கொண்டு என்பது தவறு.

அது, கற்றாரையே கொண்டு என்று இயல்பாய்ப் புணர்தல் வேண்டும். மென்றொடர்க் குற்றியலுகரமான இறந்தகால வினை யெச்சங்கள் இயல்பாயே புணரும் எ-டு. கண்டுபேசி வந்துபோக, சென்றுகொடு. கண்டுப்பேசி என்பது தவறு.

முண்டகம்

3

கமலத்திற்கு மூன்று தென்சொற்கள் உள. ஒன்றைக் குறிக்க மறந்தேன். அது ‘முண்டகம்’4

ஒலியா எழுத்து

யான் விடுத்த கட்டுரை இறுதிப் பாகியில் ‘hour'என்பதைத் தமிழில் 'ஹவர்' என்று எழுதிவிட்டேன். அதை ‘அவர்' என்று திருத்திக் கொள்க. அச்சொல்லில் ‘h'ஒலிக்காது.

இன்பு இனிது:

திருமணம் என்மகட்குத் தென்பாய் நிகழ

ஒருநூறுரூபா வுகுத்த - பெருமான்

1. 20 கும்பம் 1995 (வி.பொ.ப)

3. 21.-4-64 (மி.மு.சி.)

5.5-12-64 (வி.அ.க.)

5

2. 20 கும்பம் 1995 (வி.பொ.ப)

4. 12-11-64 (வி.அ.க.)