உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

67

தமிழைக் காக்கவும் வளர்க்கவும் முடியும்”. என்பது அக்கடிதச் செய்தி.

னி, அக்கழகத் தொடர்பான சில குறிப்புகள் கடிதங் களில் கிடைக்கின்றன.

“தமிழ்க் கழக முதல் மாநாட்டு அழைப்பிதழ் வந்துள்ளது.. நிரம்பப் புணர்ச்சிப் பிழை கொண்டுளது” (29-11-65)

66

'தமிழைக் காப்பதே என் போன்றோர் கடமை. அந் நோக்கத்துடன் பிறருடன் ஒத்துழையாதான் தமிழனல்லன்.'

(1-9-64)

“தனி என்ற சொல்லை நீக்கித் தமிழ்க் கழகம் என்றே பெயர் வைக்கச் சொல்லியிருக்கிறேன்” (1-9-64)

66

றுப்பினர் அனைவரும் தனித்தமிழே பேச வேண்டும் என்னும் யாப்புரவில்லை. தனித் தமிழ்ப் பற்றிருந்தாற் போதும்

(1-8-64)

பாவாணர் குறிப்பிட்டுள்ள பொதுத் திடடங்களைச் சிக்கெனக் கடைப்பிடித்துச் சீருற இயங்கும் தமிழ்க் கழகம் னிமேல்தான் தோன்ற வேண்டும் என்பது வெளிப்படை.

தமிழைக் காக்கும் நோக்கத்துடன் பிறருடன் ஒத்துழைக் கும் தலைவரோ அமைப்போ வழிகாட்டியோ இற்றைக் கழகங் களுள் எதற்காவது உண்டோ? தம் முனைப்புக்குப் பலியாகாத அல்லது ஆக்காத தமிழ் முனைப்பு எங்கேயுள்ளது?

பாவணரை நோக்காது, பாவாணத்தை நோக்கும் பார்வை எப்பொழுது தோன்றும்? அப்பொழுதுதான் தமிழாக்கம், தமிழ்க்காப்பு, தமிழ் அரவணைப்பு, தமிழுள்ளம், தமிழ் வாழ்வு ஆயனவெல்லாம் ஒருங்கே தோன்றும்!