உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

11. தனித்தமிழ்ப் பெயரீடு

தமிழ் என்பது தனித்தமிழே, தனிப்பால் என்பது கலப்புப் பால் ஏற்பட்ட பின்னர் வந்தது போலத் ‘தனித்தமிழ்' என்னும் ஆட்சியும் கலப்புத் தமிழ் ஏற்பட்ட பின் வந்த ஆட்சியே என்பது பாவாணர் குறிப்பு.

தமிழ்ப் புலவராயினாரும், தமிழ் ஆர்வலராயினாரும் சிலர் பாவாணரொடு நெருக்கமாக இருந்தனர். அவர்கள் பெயர்கள் தனித்தமிழில் அமைந்திராக்கால் தனித்தமிழ்ப் பெயரீட்டை நேரில் வலியுறுத்தலும் கடிதவழி வழியுறுத்தலும் பாவாணர் வழக்கமாகும். பிறமொழிப் பெயராக இருப்பவற் றைத் தாமே தமிழாக்கம் செய்து சுட்டுவதும் அவர் தம் நடை முறைச் செய்தியாம்.

"சின்னச் சாமியைச் சின்னாண்டார் என மாற்றிக் கொள்க. வேறு பெயரும் தாங்கிக் கொள்ளலாம் என்று 15-4-64இல் சேலம் புலவர் சின்னச்சாமிக்கு எழுதினார்.

21.4.64இல், “பெயரை மொழிபெயர்க்க விரும்பி, சின்னாண்டவன், சின்னத் தேவன், சிறிய நம்பி, என்பவற்றுள் ஒன்றை ஏற்க. அல்லாக்கால் பழந்தமிழ்ப் புலவர் பெயரினின்றும் அரசர் பெயரினின்றும் ஒன்றைத் தெரிந்துகொள்க” என்று வரைந்தார்.

“நுங்கள்

பெயரை

ஆமலையழகர்' என மாற்றிக் கொள்க அல்லது வேறுதனித்தமிழில் சொல் வேண்டும்” என்று பசுமலைப் புரவர் வீ.ப.கா சுந்தரம் அவர்களுக்குப் பாவாணர் எழுதினார் (31-1-68)

திருச்சி முத்தமிழ் மன்ற உறுப்பினர், "சுந்தரராசன் ‘எழிலரசன்' என்றும், இராஜமோகன் என்பவர் ‘மையலரசன்’ என்றும் தம் பெயரைத் தனித்தமிழாக மாற்றிக்கொண்டனர்” என்பதை மகிழ்ந்து தெரிவிக்கின்றார் (23-4-68) பாவாணர்.

பேரா. மு.தமிழ்க் குடிமகனார்க்கு முன்னைப் பெயர் சாத்தையா என்பது. “சாத்தையா என்னும் விளிவடிவைச்