உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

பாடல்கள்

பாவாணர் கடிதங்கள் வில்லை. ஒரு சில கூட்டங்கள் கூட்டி ஒரு சில சொற்பொழி வாற்றுவது எதிர்ப்பாகாது. ஆங்கிலேயரை எதிர்த்ததுபோல் இறுதிவரை எதிர்ப்பதே எதிர்ப்பு. இந்தி வந்ததினாலேயே தேவ நாகரியும் வருகின்றது" என்று அக்கடிதத்திலேயே மொழி வரலாற்றை விளக்கினார். (17-11-61)

‘விரைந்து தமிழியக்கம் தொடங்குவேன். அதற்கு முன்பே நீங்கள் மூவிரும் பெயரை மாற்றிக்கொள்வது நன்று” என்றார். (27-12-67).

மெ. சுந்தரனாரும், மனோகரனாரும் பாவாணரால் எப் பெயர்களால் சுட்டப்பெற்றனர் என்பதும் அவர் கடிதத்தால் விளங்குகின்றனது. “பர். மெ. அழகரும், திரு. மனங்கவர்ந்தாரும் நன்றாயிருப்பரென்று கருதுகின்றேன்” என்னும் கடிதப் பகுதி யால் (25-7-65) இது விளங்கும்.

“சேய்க்குப் பின்வரும் பெயர்களுள் ஒன்றைத் தெரிந்து காள்க எனத் திரு. மி. மு.சி. அவர்களுக்குப் பாவாணர் எழுதினார்.

66

அமுதவல்லி,

உலகநாயகி அல்லது உலக நங்கை, கண்மணி, செந்தமிழ்ச் செல்வி, தமிழரசி, நல்லம்மை, பூங்கொடி, மேகலை,

பழம்புலத்தியர் பெயர் அவ்வை, இளவெயினி, நக்கண்ணை நச்செள்ளை, நப்பசலை முதலிய இக்காலத்திற்கேற்கா.

பண்டையரசியர் பெயரும் ஏழிசைவல்லபி, கரும்படு சொல்லி, பண்ணின்நேர்மொழியாள் முதலியன இலக்கியச் சொற்றொடர்கள்.

பெயர்கள் நீண்டிருக்கும்போது இறுதிச் சொல்லைத்தான் அழைக்கவேண்டும்.

டு) மடந்தவிர்த்த மங்கை -மங்கை

பெண்களின் உறுப்பழகைக் குறிக்கும் பெயராக இடுவது

நன்றன்று”.

18-11-68இல் அவருக்கே வேறுசில பெயர்களைக் குறித்து எழுதியுள்ளார். 23-12-68இலும் சில பெயர்களைச் சுட்டியுள்ளார்.

அணிகலம், கண்மணி, செந்தாமரை, தையல்நாயகி, நல்ல தனம்(தன்மை), பைங்கிளி, மங்கலம், வளர்மதி என்பவை முதற் கடிதத்துள்ள பெயர்கள்.