உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

73

தொல்காப்பிய மாநாட்டில் காலை மூவேறு புலவர்கள் எழுத்து சொல் பொருள் பற்றிய சொற்பொழிவுகளும் மாலை தலைவரவர் சொற்பொழிவும் நடைபெறும். இதற்குத் தலைவ ராயிருக்கச் சோமசுந்தர பாரதியாரைக் கேட்கப் போகின்றோம். தொல்காப்பிய மாநாட்டைக் குறுந்தொகை கலித்தொகை மாநாடு போல நீங்களே பொறுப்பேற்று நடத்தலாம். முன்ன தாகச் சொற்பொழிவுகளை அச்சிட்டும் கொள்ளலாம். தொல் காப்பியம் தமிழ்ப் பகைவரான பார்ப்பனர் சில முக்கியமான நூற்பாக்களுக்குத் தவறான உரை கூறுவதாலும் தொல்காப்பியக் காலம் கருத்து முதலியவை இவையே என்று நிறுவவேண்டும்.

இருநாளும் புலவர்களுக்கெல்லாம் இலவச ஊணும் இடமும் அளிக்கப்படும். அண்மையில் விளம்பரம் மாநாட்ட ழைப்பு வேண்டு கோள் நிகழ்ச்சிக்குறிப்பு முதலியவை அச்சிட்டு அனுப்பப்பெறும். இம்மாதச் செல்வியில் 3 பக்கம் இடம் விட

வைக்க.

டு

நாம் தனித்தனி ஆங்காங்கு எத்தனை கூட்டம் கூட்டினும் அத்துணை வலியுறுவனவல்ல. புலவரெல்லாரையும் ஒன்று சேர்த்துத் தொகுதியாக நின்று போராடுதலே வலியுடைத்து. சென்னையிலுள்ள எல்லாப் புலவர்க்கும் இதைப் பற்றித் தெரிவித்துப் பற்றுள்ள வரையெல்லாம் நீங்கள் அழைத் துக் கொண்டு வரவேண்டும். இது பொதுத் தொண்டென்றும், புலவரையெல்லாம் ஏற்றத் தாழ்வுணர்ச்சியின்றி உடன்பிறந்தா ரும் ஒருநிலையருமாய்த் தத்தம் பணி செய்யவேண்டியது கடமை என்றும் அவர்க்கு உணர்த்தல்வேண்டும்.

மறைமலையடிகளைத் திறப்பாளராக்கி ஐம்பது ரூபா கொடுப்பதற்கு இருந்தோம். அவர் 250 ரூபாவுக்குக் குறைந்து வர முடியாதென்று எழுதிவிட்டார்...... மாநாடு மிக மிக முக்கிய மானது. தமிழ்த் தடைகளையெல்லாம் சல்லி சல்லியாகத் தகர்த்தெறியவேண்டும் என்பது எங்கள் அவா.

தமிழன் எப்படிக் கெட்டான்? தமிழர் சரித்திரச் சுருக்கம்

தமிழின் பெருமை

தமிழ் அயன்மொழிக் கலப்பால் தளருமா? வளருமா?

இந்தியப் பொதுமொழியாதற்கு ஏற்றது எது?

இந்தியா ஒரு நாடா?

மனுதருமமும் திருக்குறளும்