உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

திருந்திய வாழ்க்கை

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கலைச்சொல்லாக்கப் பாடல்கள் 20

என்ற சிறு சுவடிகள் அச்சாகின்றன.. இவற்றுள் முந்தியது 40 பக்கம். 2 அணா. ஏனையவை தனித்தனி 1 2பக்கம். 1/2 அணா விலை.

6 An open Appeal to Anegry Recognition and literares Tamil ஆங்கில முறையீடும் வெளியாகும். இதற்குரிய அச்சுச் செலவிற்கு நீங்கள் சிறிதாவது உதவவேண்டும். மொத்தச் செலவு 30 ரூபாயாகும்.

சென்னையில் நாம் ஏற்படுத்திய தமிழறிஞர் கழகத்தைத் தலைமையாக வைத்துக்கொண்டு கோட்டந்தோறும் கூற்றந் தோறும் கிளைகளும் சிறுகிளைகளும் அமைத்துக்கொள்ள வேண்டும் இதை மாநாட்டிலேயே செய்துவிடலாம். தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே புலவர் அல்லது அறிஞர் கழகம் இருத்தல் வேண்டும். மெள்ள மெள்ள இவ்வறிஞர் கழகமே அரசியலில் தலையிட்டுத் தமிழ்நாட்டுக் கட்சியாகி அரசியைைலக் கைப் பற்ற வேண்டும். தமிழறியாதவரையும் தமிழரல்லாத திராவி டரையும்நம்பிக்கொண்டிருப்பது கழிபெருமடமையாகும்.

ஒவ்வொரு புலவரையும் தமிழறிஞர் கழகத்தில் உறுப் பினராயிருக்குமாறு மாநாட்டில் நேரிலேயே கேட்டுப் பதிவு செய்து கொள்ளலாம். பல தொண்டுகட்கும் தனித்தனி உட் கழகங்களும் மாநாட்டிலேயே அமைக்கப்படவேண்டும். வேலை பல்வேறு நிலையாய்ப் பிரிந்தும் பரந்துபட்டும் இருப்பதால் எங்களால் மட்டும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யமுடியாது. இடமும் ஊணும் ஊர்வலமும் ஏற்படுத்தி, மற்றைய ஏற்பாட் டிற்குத்தான் முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ள முடியும். ஏனையவெல்லாம் நாமிரு சாராரும் சேர்ந்தே செய்யவேண்டும்.

ரு

அச்சிட்ட மாநாட்டு அழைப்பு ஒவ்வொரு புலவர்க்கும் தனித் தனி வரும். சென்னைக்கு 100 அனுப்புவோம். நீங்கள் பகிர்ந்து விடவேண்டும்.

மாநாட்டுக்குமுன் கலைச் சொல்லாக்கம் பற்றி ஒன்றும், தமிழிசைப்பற்றி ஒன்றும் ஆக இரு கூட்டம் இங்கு நடைபெறும். அருணகிரிநாத அடிகள் கட்டாயம் மாநாட்டுக்கு வரவேண்டும். உடன் பதில்

6

ஞா. தேவநேயன்