உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

5.

6.

7.

8.

9.

10.

11.

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

அவர்களைத் தலைைைமயாகக் கொண்ட ஒரு கழகத்தை ஏற்படுத்த வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தமிழ்ப் புலவர்களுக்கு ஏற்கனவே யிருந்துவந்த குறைந்த சம்பளத் தையும் இனிவரும் தமிழ்ப் புலவர்கள் பெறதாவாறு குறைத் திருப்பதைக் கண்டித்து, உடனே தமிழ்ப் புலவர்களுக்கு எல்.டி.சம்பளத் திட்டம் வழங்கவேண்டு மென்று சென்னை அரசியலாரை இம்மாநாடு கேட்டுக் கொள்வதோடு பி.ஓ.எல். பட்டதாரிகளுக்கு, பி.ஏ.பட்டதாரிகளுக் குரியஉரிமைகளை யெல்லாம் தரவேண்டு மென்றும் கேட்டுக்கொள்கிறது. தமிழ் வித்துவான் தேர்வோடு கூடிய பி.ஏ., பட்டமோ, தமிழில் எம்.ஏ., பட்டமோ பெற்றவரையே அரசில் தமிழ்மொழி பெயர்ப்பாளராக ஏற்படுத்த வேண்டுமென்றும், தமிழ்ப் பொதுமன்றங்களிலும் இருப்புப் பாதைக் கழகந்தோறும் ஒவ்வொரு புலவரை அமர்த்திக் கொள்வது நலமென்றும் இம்மாநாடு கருதுகின்றது.

தமிழ்நாட்டின் நடுவிலுள்ள திருச்சி வானொலி நிலையத்தில் பெரும் பதவிகளில் தமிழரே (பார்ப்பனரல்லாத வரே) நியமிக்கப்பட வேண்டுமென, அனைத்திந்திய வானொலித் தலைவரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழர் குலப் பிரிவினை காட்டாது, தம்மைத் தமிழரென ஒரே இனம் என்பதாகக் (Community)கருதவேண்டுமென்றும், அங்ஙனமே குடிமதிப்பிலும் கணக்குக் கொடுக்கவேண்டுமென்றும் இம்மாநாடு விரும்புகிறது.

அறியாமை அறவே நீங்கவேண்டுமென்றும், மக்கள் முழு விடுதலையடைய வேண்டுமென்றும் முயற்சி செய்கிற இக்காலத்தில் 100க்கு 90 பேர் எழுத்தறியாத இத்தமிழ்நாட்டில், அரசியலார் கட்டாயக் கல்வியைப் புகுத்துவதற்கு மாறாகச் சிற்றூர்களிலுள்ள நூற்றுக் கணக்கான முன்முறைப் பள்ளிகளை மூடினதைக் கண்டிப்ப துடன் அவற்றைப் புதுப்பிக்கவும் இன்னும் பல பள்ளிகளை ஏற்படுத்தவும் வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.

போர் முடிந்தவுடன் தமிழ்நாட்டைப் பிரித்து அதன் அரசியலைப் பிற மாகாணத்தாரும் நாட்டுப் பொதுஆட்சியாரும்தலையிடாதவாறு அமைக்கவேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.

கூடிய விரைவில் சென்னைப் பல்கலைக் கழகத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகமாகமாற்ற வேண்டுமென்றும், இப்பொழுதே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக் தமிழ் நாடு முழுவதற்கும் உரிய தமிழ்ப் பல்கலைக் கழகமாக்க வேண்டுமென்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது.