உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

12.

13.

14.

15.

77

தமிழ் நாடெங்கும் தைத் திங்கள் முதல் ‘வாரத்தைத் தமிழ் வாரமாக்க கொண்டாட வேண்டுமென இம் மாநாடு தீர்மானிக்கிறது.

கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கச் சிறைசென்ற தொண்டர்களையும் இம் மாநாடு மிகமிகப் பாராட்டி அவர்களுக்கு நன்றி கூறுகிறது.

நாட்டு மொழிப் பாடமாக இருக்கின்ற எல்லாப் பட்டப் பரீட்சை களிலும் தமிழ் நாட்டளவில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்றும் பிறமொழிகளை விரும்புவோர் தமிழுடன் இவற்றையும் கற்குமாறு பாடத்திட்டம் அமைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழர் இனி எப்பொழுதும் கடவுள் வணக்கம் முதலான எல்லாத் துறைகளிலும் தமிழையே பயன்படுத்த வேண்டுமென்றும், பிற மொழிகளில் எந்தச் சடங்கும் செய்யலாகா தென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

2

விடுதலை பெறுதற்கு ஆறு ஆண்டுகளின் முன்னே செய்த தீர்மானங்கள் இவை. விடுதலை பெற்று முப்பத்தெட்டு ஆண்டு கள் ஆகிய பின்னரும்கூட இத் தீர்மானங்கள் ‘தீர்மானங்கள்’ அளவிலே இருக்கத்தானே காணமுடிகின்றது!

15-4-68 கடிதம் ஒன்றால் திருச்சியில் தமிழ்ப்புலவர் மாநாடொன்று நிகழ விருந்தது அறியவருகின்றது.

66

ஆடவை (சூன்) நடுவில் திருச்சியில் நடைபெறவிருக்கும் தமிழ்ப்புலவர் மாநாடு, 'தமிழர் பழங்குடி மக்களா? வந்தேறி களா?” என்னும் வினாவுக்கு அறுதியும் இறுதியும் உறுதியுமாக முடிவு செய்யப் பெறுமாதலால் மிக முதன்மையானதாக இருக்கும்” என்பது அது.

3

“நாம் தனித்தனி ஆங்காங்கு எத்தனை கூட்டம் கூட்டினும் அத்துணை வலியுறுவனவல்ல. புலவரெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு தொகுதியாக நின்று போராடுதலே வலியுடைத்து” என்றும், "புலவரையெல்லாம் ஏற்றத்தாழ்வுணர்ச்சியின்றி உடன் பிறந் தாரும் ஒரு நிலையருமாய்த் தத்தம் பணிசெய்ய வேண்டியது கடமை என்றும் பாவாணர் குறிப்பிடுவனவற்றைத் தமிழ் உணர் வுடையார் இந்நாளிலேனும் எண்ணிப்பார்த்துக் கடைப்பிடித்தல்

கழிபெருநன்மையாம்.

2. சிலம்பு 19:492.

3. மி.மு.சி.கடிதம்.