உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

5.

6.

7.

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

தமிழ் முதுமொழியும் ஆங்கிலம் புதுமொழியுமாக இருமொழியே உலகப் பொதுமொழியாக நிலைத்து நிற்கும்.

எம் அலுவலகம் வேண்டியவாங்கு விரிவுறும்.

66

8

தமிழன் எங்குச் செல்லினும் தலைமையாய்ப் போற்றப் படுவான். ‘அரசு எம் அலுவலகத்திற்கு 7 புதுப்பதவிகளைத் தோற்று வித்துள்ளது. ஆயின் கணக்கப் பிரிவிற்கேயன்றிச் சொற்றொ குப்புப் பிரிவிற்குப் பெரும்பயன் இல்லை. கண்காணிப்பாளர் தமிழ்த் தட்டச்சாளர் இரு கடைநிலை யூழியர் ஆகிய நால்வரும் கணக்கப் பிரிவிற்குரியர்.

பேரா. சதாசிவம் கல்வெட்டுச் சொற்றொகுப்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆயின் அரசு இன்னும் இசைவு தரவில்லை. மருத்தவச் சொற்றொகுப்பாளர் பதவிக்குக் தக்கார் ஒருவரும் வரவில்லை. மெய்ப்புத் திருத்தாளர் பதவிக்குப் பெருஞ்சித்திரனார் மகன் பூங்குன்றனைத் தெரிந்தெடுத்துள்ளோம். அவனுக்கும் அரசு இசைவு தரவேண்டும்.

பதிப்பாண்மை எழுத்துறவாளராகப் (Editor & Correspond- ent) பணி செய்யத் தகுதிமிக்கவர் தலைமகன் (Capt) அசரியாவே. தமிழ்ச் சொற்றொகுப்புப் பணிக்குத் தக்கவர் புலவர் இளங்குமரனார். அவர் துணைப் பேராசிரியர் சம்பளம் வேண்டுகிறார். முன்ன வரை மூப்புப் பற்றியும் பின்னவரைச் சம்பளத் திட்டம் பற்றியும் அரசு ஏற்கவில்லை. இவ்விருவரும் அகர முதலிப்பணிக்கு இன்றியமையாதவர்.

66

‘அகரமுதலியின் முதற்பகுதி அச்சிற்கு அணியமாயுள்ளது. அது வெளிவருமுன் அடுத்தபகுதி அணியமாகும். இங்ஙனம் இடையீடின்றி எல்லாப் பகுதிகளும் தொடரும்.. ஆயின் அச் சீட்டுச் செலவுக் கணக்கை அரசு இன்னும் ஏற்றுக்கொள்ள வில்லை. பணத்துறை அலுவலகத் தலைவர் 'விடுமுறையிலுள் ளாரென்றும் சொல்லப்படுகின்றது. அமைச்சர் செயலாளர் பணத்துறை அதிகாரி ஆகிய மூவருள் ஒருவரேனும் தமிழ்ப் பற்றுள்ளவராயில்லை. தமிழ் வடமொழிக்கு மூலமென்னும் கூற்று. பிராமணர் செவிக்குப் பழுக்கக் காய்ச்சிய பாவுள்ளது” 9

8.9-10-79 (கு.பூ)

இரும்

9. 14-1-80 (கு.பூ) பணியாளர் அமர்த்தம்பற்றிய செய்தி 29-7-80, 11-9-80 கு.பூ. கடிதங்களிலும் பிறர் கடிதங்களிலும் உண்டு.