உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

89

'திரு.வி.அசரியா 30-8-80 அன்று பதிப்பாண்மை எழுத்துற வாளராக அமர்த்தப்பட்டார். இது நல்லதுதான். ஆயின் போதாது. புலவர் இளங்குமரனாரும் பேரா.சதாசிவமும், பேரா. வேங்கடேசனும் அமர்த்தப்படவேண்டும்.

66

‘அகர முதலியின் முதற்பகுதி சென்ற ஆண்டே அச்சிற்கு அணியமாயிற்று. ஆயின், வெளியீட்டுச் செலவுக் கணக்கு விடுத்து ஈராண்டாகியும் இன்னும் அரசு அதை ஏற்றுக் கொள்ள வில்லை அரசினால் அமர்த்தப்பட்ட அச்சகமும் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறது.

“மதுரை மாநாட்டிற்கு 3 கோடிக்குமேல் ஒதுக்கியுள்ள அரசு தமிழுக்கு இன்றிமையாத உலகச் சிறப்புள்ள அகர முதலிக்குச் சில இலக்கமேனும் உடனடியாய் ஒதுக்கவில்லை. மாநாட்டிற்குச் செலவிடும் 3 1/2 கோடியும் விளம்பரச் சிறப்பா கவே முடியும். குமரிமலை முழுக்குத் திரைப்படத்திற்கே 4 இலக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதை நிலையாக மெய்ப்பிக்கும் அகரமுதலியைப் பற்றிச் சற்றுங் கவனிப்பதில்லை. இவ்வகர முதலியின்றித் தமிழும் வளராது: தமிழனும் முன்னேறான். இவ்வகர முதலியை நானே தொகுக்கவியலும்: எனக்குப் பின் எவருமில்லை. ஆதலால் ஐயாண்டிற்குள் முடிக்கக் கருது கின்றேன். எனக்கு மூப்பு மிகுந்து வருகின்றது. ஆதலால் 1986 - இற்குள் முடித்துவிடல் வேண்டும்.

1.

6

இளங்குமரனார், சதாசிவம், வேங்கடேசன் ஆகிய மூவர் அமர்த்தம்.

2. எனக்கு ஓர் இயங்கியும் தொலைபேசியும்

3.

என் சம்பள உயர்வு 2000 -100-3000 என்னும் திட்டம்.10

66

ச.சொ. அகரமுதலித் தொகுப்புக் காலம் நாலாண் டென்று அரசு குறித்திருப்பினும் பன்னிருமடலமும் வெளிவர குறைந்த பக்கம் பன்னீராண்டு செல்லும்.”11

"கேரளப் பல்கலைக் கழகமும் அரசும் இணைந்து தொகுத்து வரும் மலையாளம் -மலையாளம் - ஆங்கில அகர முதலி வேலை 1953-இல் தொடங்கிற்று. தொகுப்புப் பணியாளர் மட்டும் 36 பேர். முதன் மடலம் அகரம் மட்டும் 1965- இலும், 2-ஆம் மடலம் (ககரம்) அச்சிலுள்ளது. இதினின்று அகர முதலி வேலையி யல்பை அறிந்து கொள்க”12

10. 23.9.80 (ச.க.)

12.26-9-75 (இ.கு.)

11. 26-9-75 (இ.கு.)