உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(3) இடைச்சொல்

1

இயனிலைப் படலம்

பெரும்பாலும் தமித்துவராது, பெயருக்கும் வினைக்கும் உறுப்பாக அவற்றினிடத்து வரும் சொற்கள் இடைச்சொல்லாம். இடை இடம். சிறுபான்மை தமித்தும் வருவதால் தமித்து வருவன, சொல்லிடத்து வருவன என இடைச்சொற்கள் இருபாற்படும். தமித்து வருவனவும், இயற்கையிடைச் சொல்லும் செயற்கை யிடைச்சொல்லும் ஆக இருதிறப்படும். இடைச்சொல்லாகவே தோன்றியவை இயற்கை; பெயரும் வினையும் பல்வேறு பொரு ளுணர்த்தி இடைச்சொல்லாகத் திரிந்தவை செயற்கை.

1. தமித்து வருவன

.

சுட்டிடைச்சொற்கள்

எ-டு:

அந்தா, அதோ, அன்னா இந்தா, இதோ, இன்னா

உவ, உது

ஆ, அ, ஈ, இ, ஊ, உ என்பன அந்த, இந்த, உந்த என்று பொருள் தரும் சுட்டுக் குறிப்புப் பெயரெச்சங்களாயினும் (Demonstrative Adjectives) தமித்து வழங்காமையின், இடைச்சொல்லாகக் கொள்ளப் படும்.

வினாவிடைச்சொற்கள்:

எ-டு: எந்தா, எதோ, எதா

ஏ, எ, யா என்பன எந்த என்று பொருள்படும் வினாக் குறிப்புப் பெயரெச்சங்களாயினும் (Interrogative Adjectives) தமித்து வழங்கா மையின், இடைச்சொல்லாகக் கொள்ளப்படும்.

உவம வுருபுகள்:

(1) சுட்டடி: எ-டு: அன்ன, ஆங்க

(2) வினையடி: வெல்ல, வீழ