உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

மகுட இடைச்சொற்கள்

தாலாட்டுப் பாட்டு-தாலோ தாலேலோ கப்பற் பாட்டு-ஏல ஏலோ ஏல ஏலோ

கூப்பீட் டிடைச்சொற்கள் (அஃறிணைபற்றியன):

எ-டு: தோதோ (துவா துவா), பேபே (போ போ)

நாயேவ லிடைச்சொற்கள்

எ-டு: உசு, உரீசு

5

இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக்குறிப்பிடைச் சொற்களும் :

பிள்ளைகள் துன்புறுமிடத்தும் வியக்கத்தக்க பொருளைக் காணும்போதும், தம் பெற்றோரை விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயர்களினின்று இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக்குறிப் பிடைச்சொற்களும் தோன்றியுள்ளன.

இரக்கம்

வியப்பு

பெற்றோர்பெயர்

இடைச்சொல்

பெற்றோர்பெயர்

இடைச்சொல்

ஐயன்

ஐயோ, ஐயவோ

அப்பன்

அப்ப, அப்பா

ஐயகோ, ஐயே

அன்னை

அன்னோ

அம்மை

அம்ம, அம்மா

அத்தன்

அத்தோ,அந்தோ

அச்சன்

அச்சோ

அந்தவோ

அந்தகோ

அச்சன்

அச்சோ

அக்கை

அகோ

ஆத்தே

அக்கை

அக்கோ-அகோ ஆத்தை

உலகவழக்கில், வியப்புக்குறிப் பிடைச்சொற்கள் ஆண்பாற் பெயர்த்திரிபாயின் அடா(அடே) என்னும் சொல்லையும், பெண் பாற் பெயர்த்திரிபாயின் அடி (அடீ) என்னும் சொல்லையும், முற் கொள்ளும்.

ஆஆ என்னும் உணர்ச்சி யொலியடுக்கு, ஆவா என்று புணர்ந்து இரக்கக்குறிப் பிடைச்சொல்லும், அதன்பின் ஆகா என்று திரிந்து வியப்புக்குறிப் பிடைச்சொல்லும் ஆகும்.

அட, அடா, அட்டா என்பன வியப்பும் கழிவிரக்கமும் உணர்த்தும் இடைச்சொற்களாம். அளிது, கெட்டேன் என்னும் இரக்கச்சொற்களுள் முன்னது செய்யுள் வழக்காம்.