உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

7

கடகட, கிசுக்கு, குடுகுடு, குப்பு, குபுக்கு, சட்டு, சரசர, சரட்டு, திடுதிப்பு, படபட, பசக்கு, பரபர, பொருக்கு, மடமட, மழமழ, மொடுக்கு, விசுவிசு, விசுக்குவிசுக்கு, விருவிரு,, வேகுவேகு.

சுறுசுறுப்பின்மை : பூனாம் பூனாம்

அசைவு : கறங்கறம், கிடுகிடு, கிணுக்குக்கிணுக்கு,கிணுக்கட்டிக் கிணுக்கட்டி, கிறுகிறு, கொடுகொடு; தளதள; படக்குப் படக்கு; வட வ

இயக்கம் (செலவு): சவக்குச்சவக்கு, தத்தக்கப் பித்தக்க, தொதுக்குப் பொதுக்கு, நெளுநெளு

அமைதி: கம், நள்

சிந்துகை: குபுகுபு, சொளுசொளு, பொலுபொலு

குளநிறைவு: கெத்துக்கெத்து

நனைவு: தொப்புத்தொப்பு

உலர்வு: கலகல, வறவற

லு

செறிவு: கொசகொச, செளுசெளு, திமுதிமு, பொதபொத

இறுக்கமின்மை: தொளதொள

செழிம்பு: கறுகறு, கிளுகிளு, செழுசெழு, புசுப்புக

பருமை: பொந்துபொந்து, பொம்.

சுருங்குதல்: சிவுக்கு, புசுக்கு

அயர்வு: வலவல

விழித்தல்: திருதிரு, பசபச்

விடிதல்: பலார்

சினத்தல்: கடுகடு, சள்சள், சுடுசுடு-சிடுசிடு, வெடுவெடு

பேச்சு: கொணங்கொணம், சளசள, தொணதொண, வளவள்.

ச் சொற்களையெல்லாம் என்று என்னும் இடைச்சொல் வினைமுற்றோடு இணைக்கும். எ-டு: சுள் என்று வெயிலடிக்கிறது. 2. சொல்லிடத்து வருவன

சொல்லிடத்து வரும் இடைச்சொற்கள், (1) முன்னொட்டுகள், (2) வரிசையிடைச்சொற்கள், (3) இணைப்புச்சொற்கள், (4) பல்பொரு ளிடைச் சொற்கள், (5) ஈறுகள், (6) இடைநிலைகள், (7) சாரியைகள், (8) வேற்றுமை யுருபுகள், என எண்வகைப்படும்.