உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

ஆள்' ஈறு அள் என்று குறுகும்.

எ-டு: அவள், மகள்.

று

13

அள்ளீறு பெற்ற மகள் என்னும் பெயரும் மாள் என்று மருவிப் பெண்பாலீறாம்.

எ-டு: வேண்மகள் - வேண்மாள், பெருமகள் - பெருமாள். (பெருமால் - பெருமாள் = விட்டுணு)

சில அன்னீற்று ஆண்பாற் பெயர்கள் பெண்பாலில் ஐ யீறாகத் திரியும்.

எ-டு: ஆசிரியன்

-

-

சிவை, ஆசிரியை, ஐயன்-ஐயை, சிவன் பண்டிதன் - பண்டிதை, பரத்தன் - பரத்தை, பரன் - பரை, வலவன் வலவை. பண்டையொருமை யீறாகிய இகரவீறும் பெண்பாலீறாதல் முன்னர்க் கூறப்பட்டது.

எ-டு: செல்வன்-செல்வி, புலவன்-புலத்தி.

கள்ளன்-கள்ளி, கிழவன்-கிழத்தி.

சில ஆண்பால் அன்னீறு பெண்பாலில் இனி என்று திரியும். எ-டு: பாணன்-பாணினி-பாடினி.

சில ஆண்பால் அனன் ஈறு பெண்பாலில் அனி என்று திரியும். எ-டு: பார்ப்பனன்-பார்ப்பனி.

அன்னையைக் குறிக்கும் அம்மை, அச்சி என்னும் பெயர்கள் அருமைபற்றிப் பெண்பாலீறாம்.

எ-டு: கண்ணம்மை, தங்கைச்சி.

அத்தி அச்சி என்னும் அன்னை பெயர்கள், குலமும் தொழிலும் பற்றிய பொண்பாலீறாய் வழங்கும்.

எ-டு: மறத்தி, மருத்துவச்சி.

அத்தி, அச்சி என்பன இத்தி, இச்சி என்றுந் திரியும்.

எ-டு: வேட்டுவித்தி, கட்டுவிச்சி.

சில பெண்பாற் பெயர்கள்,

ஆண்பாற்குரிய மறமும்

ஆண்மையு முணர்த்த ஆண்பாலீறு கொள்ளும்.

எ-டு: அம்மை-அம்மன், பேடு-பேடன்.

அம்மை என்னுஞ் சொல்லை யொத்து, அக்கை என்னும்

சொல்லும் அக்கன் என்று திரியும்.