உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

(2) தொழிற்பெயர்+துணைவினை

41

எ-டு: கொலையுண்டான், கொலைப்பட்டான், குத்துப்பட்டுச் செத்தான்.

(3) வினைமுதனிலை+துணைவினை

எ-டு: கொல்லுண்டான், வெட்டுண்டான்.

·

வற்றின் வினைமுதனிலையை முதனிலைத் தொழிற் பெய ராகவுங் கொள்ளலாம்.

தமிழிற் செயப்பாட்டுவினை பெருவழக்கன்று. பெரும்

பாலும், செயப்பாட்டு வினைப்பொருளைச் செய்வினைவடிவிற் கூறுவதே தமிழர் வழக்கம்.

எ-டு: புலியடித்துச் செத்தான்.

மறைமலையடிகள் எழுதிய நூல். தச்சன் செய்த பெட்டி.

பெயரெச்ச வீறுகள்

தெரிநிலைப் பெயரெச்சம்:

அ - இ. கா. ஈறு. எ-டு: செய்த ( செய்து+அ)

அ - நி. கா. ஈறு. எ-டு: செய்கின்ற (செய்கின்று+அ)-செய்கிற. உம் - எ. கா. ஈறு. எ-டு: செய்யும் (செய்+உம்).

உ-உம் (முன்மைச் சுட்டடிச்சொல்)

குறிப்புப் பெயரெச்சம்

அ எ

அ (முக்காலப்பொது), எ டு: நல்ல.

இறந்தகால நிகழ்காலக் குறிப்புப்பெயரெச்ச வீறாகிய ‘அ’ அந்த என்று பொருள்படும் சேய்மைச்சுட்டாகும். செய்து, செய்கின்று, நல் என்பன முற்காலத்தில் முற்றுச்சொற்களாயும் இருதிணையைம்பால் மூவிடப் பொதுவாயும் இருந்ததினால், வினையாலணையும் பெயராகி

செய்த என்பது, செய்தேனாகிய அந்த, செய்தேமாகிய அந்த, செய்தாயாகிய அந்த, செய்தீராகிய அந்த, செய்தானாகிய அந்த, செய்தாளாகிய அந்த, செய்தாராகிய அந்த, செய்ததாகிய அந்த, செய்தனவாகிய அந்த என்று பொருள்பட்டிருக்கும்.

இங்ஙனமே ஏனை யிருசொற்கட்கும் ஒட்டுக.

செய்யும் என்னும் பெயரெச்சம், 6ஆம் வேற்றுமைப் பெயர் போல முன்பின்னாக மாறிய செய்யுள் என்னும் எதிர்கால வினை

முற்றாயிருக்கலாம்.