உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தமிழ் வரலாறு

இவ் உவு ஈறு ஒவ்வு என்னும் துணைவினையின் சிதைவாகும். ஒவ்வுதல்=ஒத்தல், பொருந்துதல், இசைதல்.

எழ+ஒவ்வு=எழுவு, கொள+ஒவ்வு+கொளுவு, உகரத்தின் முன் அகரம் தொக்கது.

(5) துணைவினை பெறுதல்

எ-டு: ஊறவை, காயப்போடு, நிற்பாட்டு, மறக்கடி, எழச்செய், வரப்பண்ணு.

(6) அளபெடுத்தல்

இக்காலத்தில் கட்டு, மண்டு முதலிய குற்றுகரவீற்று வினைச் சொற்கள் கட்டி, மண்டி என இகரவீறேற்று இறந்தகால வினை யெச்சமாவது போல், முதற்காலத்தில் இரு, உடு முதலிய முற்றுகர வீற்று வினைச்சொற்களும் இகரவீறேற்று இரி, உடி என இறந்த காலவினை யெச்சமாகி யிருக்கலாம். இவ் வடிவங்களை அள பெடைப்படுத்திப் பிறவினையாக்கி யிருக்கலாம்.

இரி-இரீஇ=இருத்தி, உடி-உடீஇ=உடுத்தி, கொளி-கொளீ இ கொளுத்தி.

=

கொளி(கொள்ளி) என்பதை அள்ளி, எள்ளி, தள்ளி, துள்ளி என்பனபோற் கொள்க.

(7) இயல்பாயிருத்தல்

எ-டு: கதவு திறந்தது-கதவைத் திறந்தான், விறகு பிளந்தது- விறகைப் பிளந்தான்.

செயப்பாட்டு வினையீறுகள்

செயப்பாட்டுவினை வடிவங்கள்

(1) அகரவீற்று வினையெச்சம்+துணைவினை

எ-டு:

எழுதப்படு, எழுதப்பட்டது.

வாழ்த்தப்பெறு, வாழ்த்தப்பெற்றான்.

பெறு என்பது பெரும்பாலும் பேறுபற்றியும், படு என்பது பெரும் பாலும் பாடுபற்றியும், வரும். பாடு=கேடு, செயயப்படுகை. எ-டு: பரிசளிக்கப் பெற்றான், உயர்த்தப்பெற்றான், கொல்லப் பட்டான், தள்ளப்பட்டான், உண்ணப்பட்டது.