உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழ் மரபுரை





78

எ-டு:

தமிழ் வரலாறு

கும்பு- கும்ப்பு (தெ.), என்றார்-அண்ட்டாரு(தெ). கும்ப்பு, அண்ட்டாரு என்று எழுதுவது தமிழ் மரபன்று.

வடக்கே செல்லச்செல்ல, மொழியொலிகள் இங்ஙனம் வலித்துக் கொண்டே போகும். இதற்குத் தொடக்கம் தெலுங்கும் முடிவு சமற்கிருதமும் ஆகும். தெலுங்கு வடமொழிபோல் வல்லோசை பெற்றிருப்பதுடன், வடதிசையாற் பெயர்பெற்றிருப் பதும் கவனிக்கத் தக்கது. தமிழொலிகள் முதற்கண் வடமொழியிற் போல் கடுவொலிகளும் (surds) பொலிவொலிகளுமாய் (sonants) இருந்த பின்னர்க் கடுமையும் பொலிவும் நீங்கினவென்பது, வன்காய் மீண்டும் மென் பிஞ்சாயிற்றென்று கூறுவதுபோன்றதே.

ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப என்னும் வன்கூட்டொலிகள் தெலுங்கிற் பெருவழக்காய் வரும்; தமிழில் மருந்திற்குங் காணக் கிடையா. முதன் முதல் வடதிசையால் வடகு என்று பெயர் பெற்றதும், உண்மையில் வடமொழிக்கு அடிப்படையும் தெலுங்கே. 7. பிராகுவீத் திரிவு

தமிழ் வேங்கடத்திற்கு வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்ததுடன், திரவிடமொழிகளும் வடக்கே செல்லச்செல்ல மேன் மேலும் திரிந்தும், சிறுத்தும், சிதைந்தும், சிதறியும், இலக்கியமற்றும், ஆரியமாக மாறியும் போயின.

வடமேற்கோடித் திரவிட மொழியான பிராகுவீச் சொற்கள்

வருமாறு:

மூவிடப்பெயர்கள்

பிராகுவீ

தன்மையொருமை

தன்மைப்பன்மை

முன்னிலையொருமை

முன்னிலைப்பன்மை

படர்க்கை ஒன்றன்பால்

தமிழ்

ஏன் (யான்)

நாம் : நீ

நன்

நீ

நரம்

நும்

அது

ஓ, ஓது

தேன்

படர்க்கைத் தற்சுட்டொருமை : தான்

எண்ணுப்பெயர்கள்

ஒன்று-அசித், இரண்டு-இரத், மூன்று-முசித்.

ஏனை யெண்ணுப் பெயர்களெல்லாம் இந்தியிலுள்ளனவே.