80
தமிழ் மரபுரை
80
சில பிராகுவீத் தொடரியங்கள்
ஈ அரேட் = நான் இருக்கிறேன்.
நீ காச
=
நீ போகிறாய். =
நாபின் தேர் ஏ? = உன் பெயர் என்ன?
தமிழ் வரலாறு
கனா பாவ ஹமே சுன் உராட்டீ தூலிக் = என் அப்பனார் அந்தச் சின்ன உறையில் (வீட்டில்) குடியிருக்கிறார்.
kh, gh முதலிய சில மூச்சொலி யெழுத்துகளும், சார் (char), தந்தம் முதலிய இந்தி வடமொழிச்சொற்களும், பிராகுவீயிற் கலந்து வழங்குகின்றன.
தமிழின் குமரிக்கண்டத் தோற்றத்தை யறியாதும், தமிழின் இயல்பையும் திரவிடத்தின் திரிபையும் நோக்காதும், பெரும்பால் மேலை மொழிநூலறிஞர், அநாகரிக நிலை நாகரிக நிலைக்கு முந்திய தென்னும் நெறிமுறையைக் குருட்டுத்தனமாய்ப் பின்பற்றி, திரவிடம் திருந்தித் தமிழானதென்றும், பிராகுவீ முந்துநிலை மொழியென் றும், தமிழர் வடமேற்கினின்று பெலுச்சித்தான வழியாய்த் தெற்கு வந்தா ரென்றும், வந்தவழியில் பெலுச்சித்தானம் இருப்பதால் அங்கத்து மொழி அநாகரிக நிலையில் உள்ளதென்றும், தெற்கு வந்தபின் தம் மொழியை வளர்த்துக்கொண்டா ரென்றும், உண்மைக்கு முற்றும் மாறாகக் கூறியுள்ளனர்.
ஒரு மொழியின் சொற்கள், முந்துநிலை, சிதைநிலை ஆகிய இரு நிலையிலும் குறுவடிவு கொண்டு நிற்கும். பிராகுவீச்சொற்கள் குறு வடிவுகொண்டிருப்பது, சிதைநிலையேயன்றி முந்துநிலை யன்று. வாய்கள் என்னும் ஒரு சொல்லின் சிதைவை நோக்கினும் இவ் வுண்மை விளங்கிவிடும்.
வழி-(வயி)-வாய்=உணவு புகும் வழி. கள்ளுதல் கலத்தல் அல்லது கூடுதல். பன்மை ஒரு பொருளின் கூட்டமாதலால், கள் என்னும் சொல் பன்மையீறாயிற்று.
வாய்-பா (பி.) கள்-க் (பி), வாய்கள்-பாக் (பி.) இங்ஙனமே பிறவும். 8. திசைமொழித் தெரிப்பு (Regional Dialectic Selection)
தமிழில் மிகுந்த சொல்வள முண்டு. ஒரு செல்வத்தாய் வீட்டினின்று, ஒருவகைப்பட்ட பல பொருள்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு புதல்வியும் எடுத்துச் செல்வதுபோல், தமிழிலுள்ள ஒரு பொருட் பல சொற்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு திசைமொழி யும் கையாண்டுள்ளது.
எ-டு: இல் (தெ.), மனை (க.), வீடு (ம.).